நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
X

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம் பெங்களூருவில் நடைபெற்றது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம் எளிமையாக நடந்தது.

இரண்டாவது முறையாக மத்திய அமைச்சராக இருக்கும் நிர்மலாசீத்தாராமன் வீட்டு திருமணம், அதுவும் உலகின் சக்தி வாய்ந்த நிதியமைச்சர் என கருதப்படும் அந்த அம்மையாரின் வீட்டு திருமணம் மிக எளிமையாக நடந்திருக்கின்றது.

ஒரு ஆரவாரமில்லை, சத்தமில்லை, களபேரமில்லை, பேனர் இல்லை, மாபெரும் பந்தல் இல்லை, நாள் கணக்கில் விருந்து இல்லை, பெரும் தலைகள் வரவில்லை, வந்து அரசியல் பேசவில்லை, எதுவும் பெரும் ஆர்பாட்டமில்லை.

இவ்வளவுக்கும் அவருக்கு அப்பெண் ஒரே மகள். இந்தியாவின் நிதியமைச்சர் அதுவும் உலகின் மிகசிறந்த நிதி அமைச்சர் என பெயர் பெற்ற அம்மையாரின் வீட்டுதிருமணம் இப்படி நடக்க சில மாதங்களுக்கு முன் தமிழக அமைச்சர் வீட்டு திருமணம் எத்தனை நூறு கோடி செலவில் நடந்தது என்பது உலகறிந்தது

சமீபத்தில் குமரி பக்கம் சாதாரண திமுக பிரமுகரின் வீட்டு திருமணம் பல கோடி செலவில் நடந்தது எனும் செய்தியெல்லாம் வந்தது.

இந்தியாவினை கொரொனா காலத்தில் தாங்கி நின்றவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சராக அவர் செய்திருக்கும் சீர்திருத்தமும் நடவடிக்கையும் தான் இன்று தேசத்தை தாங்கி நிற்கின்றன. ஆனானபட்ட அமெரிக்காவே கடன் உச்சவரம்பை உயர்த்தி தத்தளிக்கும் போது இத்தேசம் நிலையாக நிற்க நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனின் சிறந்த நிர்வாகம் ஒன்றே காரணம். இப்படிப்பட்ட ஒருவரது மகளின் திருமணம் மிக,மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது. பிரதமர் மோடியின் தாய் இறந்த போது கூட பா.ஜ.,வை சேர்ந்த யாரும் கூட்டம் கூடி எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல், இயற்கை நிகழ்வுகளை இயல்பாக ஏற்று பழகி விட்டனர். இதனை பார்க்கும் போது, பா.ஜ., தலைவர்கள் எவ்வளவு பக்குவமான வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது புரிகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்