வேளாண் சட்டம் வாபஸ்: அமித்ஷா, ராகுல், கங்கனா ராவத் சொல்வது என்ன?

வேளாண் சட்டம் வாபஸ்: அமித்ஷா, ராகுல், கங்கனா ராவத் சொல்வது என்ன?
X
உள்துறை அமைசர் அமித் ஷா 
வேளாண் சட்டம் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , பிரியங்கா உள்ளிட்டோர் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில், 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அறிவித்தார். இதுபற்றி, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பும், வரவேற்பும் கலந்த கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், பிரதமர் தனது அறிவிப்பை 'குரு புராப்' தினத்தில் வழங்கியிருப்பதில் சிறப்பம்சம் கொண்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதையே, இந்த அறிவிப்பு காட்டுகிறது. இதன் மூலம், மிகச்சிறந்த அரசியல் திறனை பிரதமர் வெளிப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.


காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருத்து தெரிவிக்கையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. துன்பப்படும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டது யாரால்? விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று நீக்கப்படும் என்று சொல்கிறீர்கள். நாங்கள் உங்களை எப்படி நம்புவது? இந்த நாட்டில் விவசாயிகளை விட பெரியவர்கள் யாரும் இல்லை என்பதை அரசு புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், விவசாயிகள் சத்தியாகிரக போராட்டம், ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்து என்று கூறியுள்ளார்.


பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது பதிவில், ஏமாற்றம், வெட்கக்கேடானது, முற்றிலும் நியாயமற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், இதுவும் ஜிஹாதி தேசம்தான் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!