வீழ்ச்சியே வளர்ச்சியின் தொடக்கம்: சாதித்து காட்டிய டி.வி.எஸ்.

வீழ்ச்சியே வளர்ச்சியின் தொடக்கம்:  சாதித்து காட்டிய டி.வி.எஸ்.
X

பைல் படம்

டி.வி.எஸ். நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சிக்கு பின்னரே இன்று வளர்ந்து உலகப்புகழ் பெற்று நிற்கின்றன.

சுதந்திரத்திற்கு பின்னர் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொதுபோக்குவரத்தையும் கையில் வைத்திருந்தது டி.வி.எஸ்., ஸதர்ண் ரோடுவேஸ் என்ற பெயரில் இவர்கள் இயக்கிய பஸ்கள் அப்போது மிக, மிக பிரபலம். நேரம் தவறாமை, கண்ணியம், ஒழுங்கு என அத்தனை சிறப்பு பண்பிலும் கொடி கட்டிப்பறந்தனர்.

இந்நிலையில் 1970 களில் தென் தமிழகத்தில் ஓடிய சதர்ன் ரோடுவேஸ் என்ற TVS பேருந்துகள் அனைத்தும் அரசு பேருந்தாக மாற்றப்பட்டது. அதனால் டி.வி.எஸ்., குடும்பத்தினர் அனைவரும் பெரும் நெருக்கடிக்குள்ளானார்கள். ஆனாலும் TVS நிறுவனம் சோர்ந்து விடவில்லை. அடுத்த தலைமுறை வாரிசுகள் அனைவரும் ஆளுக்கு ஒரு நாட்டிற்கு படையெடுத்து Automobile துறையில் ஒவ்வொரு இளம் வாரிசும் ஒவ்வொரு பிரிவில் சிறந்து விளங்கினார்கள்.

Sundaram Fasteners, TVS Tyres, Sundaram Break linings, Lucas - TVS, என்று புற்றீசல் போல் அனைத்து மாவட்டத்திலும் வேரூன்றி கிளை பரப்பி இன்று கொடி கட்டி நிற்கிறது என்றால் அது ஒரு வியப்பின் சரித்திர குறியீடு.

TVS ஒரு விஷயத்தில் மிக தெளிவாக இருந்தார்கள். எந்த தொழிற்சங்கமும், அவர்கள் ஆலையில் எங்கும் பரவாமல் பார்த்துக் கொண்டார்கள். இன்று வரை TVS நிறுவனங்களில் ஐஎன்டியுசி என்கிற ஒரு தொழிற் சங்கம் தவிர திமுக, கம்யூனிஸ்ட், அதிமுக போன்ற எந்தவிதமான தொழில் சங்கங்களும் இங்கு தொடங்கப்படவில்லை, தொடங்க முடியவில்லை என்பது ஒரு அதிசயம்.

இந்த ஐஎன்டியுசி தொழில் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். தொழிலாளர்களின் பிரச்னைகளை போராட்டமின்றி நேரடியாக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று சுமூகமாக தீர்த்துக்கொள்வார்கள். இதனால், போராட்டம், ஆர்ப்பாட்டம், கோரிக்கை பேரணி, கதவடைப்பு போன்ற எதையும் சந்திக்காத நிறுவனம் இந்தியாவிலேயே TVS மட்டுமே.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil