/* */

மருத்துவ கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் ?

பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில், சம்பள பட்டியலில் மட்டும் இருக்கும் ஆசிரியர்கள், உண்மையில் இல்லை என தெரியவந்துள்ளது.

HIGHLIGHTS

மருத்துவ கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் ?
X

பைல் படம்

பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில், சம்பள பட்டியலில் மட்டும் இருக்கும் ஆசிரியர்கள், உண்மையில் இருப்பதில்லை என்ற அதிர்ச்சிதரும் தகவல் தெரியவந்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த விதிமுறைகளின் கீழ் புதிதாக அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் அவசர மருத்துவத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 23 வெளியிடப்பட்ட வரைவில், இளங்கலை மருத்துவ சேர்க்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 14 துறைகளில் அவசர மருத்துவத் துறையும் ஒன்றாகும்.

இது தொடர்பான இந்திய அவசர கால மருத்துவர்கள் கூட்டமைப்பின் கேள்விகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் அளித்த பதிலில், "நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில் 2022-23ம் ஆண்டில் நடத்திய மதிப்பீட்டின் போது போலி ஆசிரியர்கள் மற்றும் உறைவிட மருத்துவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பள பட்டியலில் மட்டுமே அவர்களின் பெயர் உள்ளது. ஆனால் அவர்கள் பணிக்கு வருவதில் லை. இன்னும் சில மருத்துவ கல்லூரிகளில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படாமலும் உள்ளது. மேலும், 2 மாத வேலை நாட்களின் வருகைப் பதிவை ரேண்டமாக ஆய்வு செய்து, குறைபாடு களை நிவர்த்தி செய்ய போதுமான கால அவகாசம் வழங்கி எச்சரித்த பிறகும் கூட எந்த மருத்துவ கல்லூரியும் 50 சதவீத வருகை தேவையை பூர்த்தி செய்யவில்லை," என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், "அவர்களில் யாரும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தரவில்லை. ஏனெனில் அவசர மருத்துவத் துறையில் விபத்து மருத்துவ அதிகாரியைத் தவிர தொடர்பு கொள்ள மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என யாரும் கிடையாது," என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மருத்துவக் கல்லுாரிகளில் நிலைமை இப்படி இருக்க பாரம மக்களுக்கு எப்படி முறையான சிகிச்சை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Updated On: 3 Oct 2023 1:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  6. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  7. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  8. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  9. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!