கிளைமாக்ஸ் காட்சிகள் தொடக்கம் : வரிந்து கட்டி களத்தில் நிற்கும் தேர்தல் ஆணையம்..!
தேர்தல் ஆணையம் (கோப்பு படம்)
தமிழகத்தில் வரும் ஏப்., 19ம் தேதி வெள்ளிக்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் ஏப்., 17ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அன்று மாலையே ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வெளிமாவட்டத்தை, வெளி தொகுதியை சேர்ந்த நபர்கள் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.
தற்போதய நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய 15ம் தேதி திங்கள் கிழமையும், 16ம் தேதி செவ்வாய்க்கிழமையும் சரியான நாட்கள். காரணம் ஏப்., 14ம் தேதி புத்தாண்டு என்பதால், அன்று எந்த ரிஸ்க்கும் வேண்டாம் என அரசியல் கட்சிகள் முடிவு செய்து விட்டன. அதேபோல் ஏப்., 17 இறுதிக்கட்ட பிரசாரம், தவிர அன்று மாலைக்குள் தொகுதியை விட்டு வெளி மாவட்டத்துக்காரர்கள் வெளியே சென்றுவிட வேண்டும்.
எனவே பணப்பட்டுவாடாவிற்கு வாய்ப்புகள் ஏப்., 15 மற்றும் ஏப்., 16 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே. இந்த இரண்டு நாட்களிலும் எந்த பட்டுவாடாவும் நடக்கவே விடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. போலீஸ், வருவாய்த்துறை உட்பட அத்தனை தேர்தல் பணி அலுவலர்களையும் இதற்காக களம் இறக்கி உள்ளது.
பணப்பட்டுவாடா குறித்து உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால், அந்த தொகுதியின் தேர்தலையே நிறுத்தி வைக்கும் அளவுக்கு கடுமையான முடிவுகளை எடுக்கவும் தேர்தல் ஆணையம் தயாராகவே உள்ளது. ஆனால் இது வாழ்வா, சாவா போராட்டம் என்பதால் பணம் இல்லாமல் வாக்குகளை கவர முடியாது என்பதில் அரசியல் கட்சிகள் உறுதியாக உள்ளன.
ஆக இந்த 2024ம் ஆண்டிற்கான இறுதிக்கட்ட ரேஸ் தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையம் தனது முழு பலத்தையும் திரட்டி, பணப்பட்டுவாடாவை தடுத்து நியாயமான தேர்தல் நடத்த முழு தயார் நிலையில் உள்ளது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu