பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி?

பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி?
X
வரும் லோக்சபா தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுக்க கடும் கிடுக்குப்பிடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் தேர்தல் களம் தி.மு.க.,விற்கு சாதகமாக இருந்தது. அப்போது கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர்கள், ‘எதற்கு தமிழகத்தில் தேர்தல் நடத்திக்கிட்டு எப்படியும் தி.மு.க., தான் அள்ளப்போகிறது. அதற்கு மீண்டும் தி.மு.க.,வினரையே எம்.பி.,க்களாக அறிவித்து விட்டால் தேர்தல் செலவாவது மிஞ்சுமே’ என கருத்து தெரிவித்தனர். அந்த அளவு களம் தி.மு.க.,விற்கு சாதகமாக இருந்தது மறுக்க முடியாத உண்மை.

காரணம் தி.மு.க., கூட்டணி ஒட்டுகள் இரும்புக் கோட்டை போல் உறுதியாக உள்ளன. அ.தி.மு.க., சிந்தி சிதறிக்கிடக்கிறது. அ.தி.மு.க.,விற்கு எந்த பாதையில் பயணிப்பது என்றே தெரியவில்லை. பா.ஜ.க.,வும் வலுவான கூட்டணி உருவாக்க முடியாமல் பரிதவித்து வருகிறது. இப்போது வரை தமிழகத்தின் களநிலவரம் இதுவாகத்தான் இருக்கிறது.

இருப்பினும் பிரதமர் மோடி, பல்லடம், சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதும், அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவும் அரசியல் விமர்சகர்களையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மக்களின் மனம் மாறுகிறதா? பா.ஜ.க.,வின் செல்வாக்கு கிடுகிடுவென உயர்கிறதா என்ற கேள்விகளுக்கு விடை தேடினர். பதில் ஆம் என்று தான் கிடைத்துள்ளது. குறிப்பாக அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாத் கிஷோர் கூட பா.ஜ.க., தற்போதைய நிலையில் இரண்டு இலக்கத்தில் வெற்றி பெற்று எம்.பி., சீட்களை பெறும் என வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

ஆக எப்படியிருந்தாலும் தி.மு.க.,விற்கு அதிக அளவில் சாதகமாக இருந்த தமிழகத்தின் லோக்சபா தேர்தல் களம் தற்போது வலுவான ஒரு போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது என்பதை அத்தனை பேரும் ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தி.மு.க., தனது வல்லமையை விட்டுக் கொடுக்க விரும்பாது. அ.தி.மு.க., தன்மை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடும். பா.ஜ.க., தன் வளர்ச்சியை நிரூபிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி களம் கடுமையான போட்டியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், ஓட்டுக்கு பணப்பட்டு வாடா அதிகரிக்கும் என வலுவான கருத்து உருவாகி வருகிறது.

இதனை அறிந்த தேர்தல் ஆணையம், மிக நியாயமாக தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கைகளை வலுவாக எடுக்க முடிவு செய்துள்ளது. பணப்பட்டுவாடாவை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என திட்டமிட்டு விதிகளை கடுமையாக்கி வருகிறது.

அதன்படி ஒரு தொகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் பணப் பட்டுவாடா செய்ததாக உறுதியான ஆதாரங்களுடன் தகவல் கிடைத்தால், அந்த தவறை எந்த கட்சி செய்தாலும், அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்தி, மறுதேர்தலை அறிவிக்கும் அளவுக்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் மத்தியில் கருத்து பரிமாற்றம் நிகழ்ந்து வருகிறது.

பணப்பட்டுவாடா தடுப்பு நடவடிக்கைகள்:

  • ஒரு தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்தால், அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படலாம்.
  • வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு தேர்தல் செலவு வரம்பு கடுமையாக அமல்படுத்தப்படும்.
  • பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு போன்றவை தீவிரப்படுத்தப்படும்.
  • ஓட்டுநர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை தடுக்க, வாகன சோதனைகள் அதிகரிக்கப்படும்.
  • வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும்.

இப்படி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பதால், பணப்பட்டுவாடாவை தடுத்து சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓட்டுக்கு பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நடவடிக்கைகள் மூலம், நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!