தேர்தல் பத்திர விவரங்கள் வெள்ளிக்கிழமை மக்கள் பார்வைக்கு..!
உச்சநீதிமன்றம், எஸ்பிஐ (கோப்பு படம்)
தேர்தல் நன்கொடை பத்திர விவரங்கள் அடங்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ஏப்ரல் 14, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை வாங்கிய மற்றும் பணமாக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட தரவுகள் தொடர்பாக எஸ்.பி.ஐ. இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை தெரிவித்துள்ளது.
தேர்தல் நன்கொடை பத்திரம் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டோம். ஆவணங்களை இரண்டு கோப்புகளாக பென் டிரைவில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருப்பதாக எஸ்பிஐ வங்கித் தலைவர் தினேஷ் குமார் கரா கையெழுத்திட்டு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
தோ்தல் பத்திர விநியோக விவரங்கள்: ஆணையத்திடம் சமா்ப்பித்தது எஸ்பிஐ அந்த பிரமாணப்பத்திரத்தில், தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை பணமாக்கிய நாள், வாங்கிய நபரின் பெயர், எந்த கட்சி பணமாக்கியது என்பது போன்ற விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
ஒரு கோப்பில், தேர்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி, தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பயன்பெற்ற கட்சிகளின் விவரங்கள் இரண்டாவது கோப்பில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை மாலை சமா்ப்பித்தது. இந்த விவரங்களை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 15ம் தேதி) மாலை 5 மணிக்குள் பொதுமக்கள் பார்வை பதிவேற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என மட்டும் தெரிவித்துள்ளது. தேதி எதையும் அறிவிக்கவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu