'எங்க டூட்டி முடிஞ்சாச்சு..' பயணிகளை 'அம்போ' வென கைவிட்ட விமான பணியாளர்கள்..!
ஜெய்ப்பூரில் தரை இறக்கப்பட்ட விமானம்.(கோப்பு படம்)
மோசமான வானிலை காரணமாக டெல்லி செல்லும் விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது . இரண்டு மணி நேரம் கழித்து, விமானிகள் மேலும் விமானத்தை செலுத்த மறுத்துவிட்டனர்.
லண்டனில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தை மோசமான வானிலை காரணமாக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கிய விமானிகள் தொடர்ந்து விமானத்தை செலுத்த மறுத்துவிட்டனர்.
சுமார் 350 பயணிகள், சுமார் மூன்று மணிநேரம் பறந்து களைப்பாக இருந்த அவர்கள், விமான பணியாளர்களால் கை விடப்பட்டனர். இறுதியில் அவர்கள் டெல்லியை அடைய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
AI-112 விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு டெல்லியை அடைய திட்டமிடப்பட்டு புறப்பட்டது. ஆனால் டெல்லியைச் சுற்றியுள்ள வான்வெளியில் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு அந்த விமானம் தரை இறங்க முடியாமல், ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
டெல்லி செல்லும் விமானம் தனது பயணத்தை மீண்டும் தொடங்க அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 'எங்கள் பணி நேரம் முடிந்துவிட்டது' எனக் கூறி விமானிகள் அந்த விமானத்தை செலுத்த மறுத்துவிட்டனர்.
ஆதித் என்ற பயணி ஒருவர், 'நாங்கள் சென்று சேரவேண்டிய இடத்தை அடைவதற்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை என்ற பயணிகளின் துயரத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். விமான நிறுவனம் அல்லது விமான நிலைய அதிகாரிகளிடம் இருந்து உதவி கிடைக்காதது குறித்தும் அவர் புகார் கூறினார். பின்னர் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் டெல்லி சென்றடைந்தனர்.
இந்த இணைப்பை க்ளிக் செய்து வீடியோ பார்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu