இரட்டைமடி மாஸ்க் எந்த வகையில் பாதுகாப்பானது ?
இரட்டைமடி மாஸ்க் (மாதிரி படம்)
ஏன் இரட்டைமடி மாஸ்க் சிறந்தது?
1. கோவிட்19 வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பை இரட்டிப்பாக்குகிறது.
2. மற்றவர்களிடமிருந்து மூக்கு மற்றும் வாயை கச்சிதமாக மூடி மறைக்கிறது.
3. காற்றில் பரவும் நோய்ப்பட்ட வைரஸ் துகள்களில் இருந்து காக்கிறது.
கொரோனா தொற்று பெருமளவில் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தினமும் 3 லட்சம் என்கிற புதிய உச்சத்தை தொடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு இரட்டைமடி மாஸ்க் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பாக அமையும் என்று இரட்டைமடி மாஸ்க் பயன்பாட்டை பரிந்துரைக்கின்றனர்.
'இரட்டைமடி மாஸ்க்' நோய்த்தொற்றிலிருந்து மக்களை கூடுதலாக பாதுகாக்க உதவக்கூடும் என்று இரட்டைமடி மாஸ்க்கை பரிந்துரைக்கின்றனர். கொரோனா வைரஸ்க்கு எதிராக கடுமையாக போராடவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். ஆகவே, கூடுதல் பாதுகாப்பிற்காக இரட்டைமடி மாஸ்க்குகளை நாம் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், வைரஸ் மிகவேகமாக பரவி வருவதால் சாதாரண மாஸ்க் நம்மை வைரஸ் பாதிப்பில் இருந்து காக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. கொரோனா வைரஸ்சின் இரண்டாவது அலை காற்றில் வேகமாக பரவுவதாக வல்லுநர்களால் கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் பரவி ஒருவரின் சுவாசக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் செல்கிறது. அங்கிருந்து அவரின் மூச்சுக்காற்று வழியாக வெளியேறி மீண்டும் காற்றில் பரவுகிறது. அவர் தும்மினாலோ அல்லது இருமினாலோ அதன் மூலமும் பிறருக்கு வேகமாக பரவும் வாய்ப்புகள் உள்ளன.
பெரும்பாலும் வெளியில் சென்றால், எல்லா நேரங்களிலும் மாஸ்க் கையில் வைத்திருப்பது முக்கியம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வைரசால் பாதிக்கப்பட்ட நபரின் சுவாச வீச்சில் இருந்து நம்மை காத்துக்கொள்ள,பிராண்டட் நிறுவனங்களின் இரட்டைமடி மாஸ்க்குகள் பயன்தரும். இது வைரஸின் பாதிப்பில் இருந்து இரட்டை பாதுகாப்பைத்தரும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இரட்டைமடி மாஸ்க்குகள் கூடுதல் பாதுகாப்புக்கான காரணம், கூடுதல் அடுக்கு மற்றும் வடிகட்டும் திறனுக்காக மட்டுமே அல்ல. இரட்டைமடி மாஸ்க்குகள் இடைவெளி இல்லாமல், இறுக்கமாக, கனகச்சிதமாக காற்றின் துகள்களை சுவாசக் குழாய்க்குள் செல்லாதவாறு பொருந்தி மறைப்பதால்தான். இரட்டைமடி மாஸ்க் தயாரிக்கப்பயன்படுத்தப்படும் துணி மென்மையானது. அதன் மென்மைத்தன்மை முகத்தில் அழுந்தி தழும்புகளை ஏற்படுத்தாது.
நோய்த்தொற்று விகிதம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது. திறம்பட செயல்புரியும், பயன்படும் மாஸ்க்குகளை தேர்வு செய்து பயன்படுத்துவது, நம் பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும். ஆமாம், இம்சைக்குள் சிக்கிவிடக் கூடாதல்லவா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu