திருப்பதி ஏழுமலையானுக்கு வந்த காணிக்கை எவ்வளவு தெரியுமா
திருப்பதி கோயில்(பைல் படம்)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக கடந்த 7 மாதங்களில் 827 கோடி ரூபாயை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
இந்தியாவில் சிறப்பு பெற்ற கோயில்களில் திருப்பதி முதலிடம் பெற்று விடும் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவில் வாழும் இந்துக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் திருப்தி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உள்ளனர். அவர்கள் எப்படியாவது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பதில் அதிக ஆவலுடன் உள்ளனர். அப்படி தரிசிக்கும் போது, தனது உள்ளம் கவர்ந்த தெய்வத்திற்கு காணிக்கைகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். அது பற்றி பார்ப்போம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனாவிற்கு பிறகு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களில் பலர் முன்பதிவு செய்தும், இலவச தரிசனத்தின் மூலமாகவும் கோயில்களுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றி வருவதுடன் முடி காணிக்கை என பல்வேறு வகைகளில் கோயிலுக்கு காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடப்பாண்டு முதல் 7 மாதங்களில் ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக 827 கோடி ரூபாயை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இவற்றுள் அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் 129 கோடி ரூபாயையும், மிக குறைவாக மே மாதத்தில் 109 கோடியே 99 லட்சம் ரூபாயையும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
ஒருநாளின் அதிகபட்ச காணிக்கையாக ஜனவரி 2ம் தேதி 7.68 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. இதுவே திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் ஒரேநாளில் கிடைத்த அதிகபட்ச உண்டியல் காணிக்கையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu