ராஜ்கோட் தீ விபத்தில் இணை உரிமையாளர் உயிரிழப்பு DNA சோதனையில் உறுதி..!
DNA Confirmed Prakash Hiran's Death,Rajkot Fire,TRP Game Zone,DNA Test,SIT Team,Raju Bhargava,Rahul Rathod,Prakash Hiran
மே 25 அன்று, குஜராத்தின் ராஜ்கோட்டில் TRP கேம் மண்டலத்தில் பரவிய பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் உயிரிழந்தனர். அதன் உரிமையாளர்களில் ஒருவரான பிரகாஷ் ஹிரானும் உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது.
DNA Confirmed Prakash Hiran's Death
அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் ஹிரன் இருப்பது தறியவந்துள்ளதாகவும் , தீ விபத்து நடந்த இடத்தில் அவரது வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் என்டிடிவி தெரிவித்துள்ளது.
ஹிரனின் சகோதரர் ஜிதேந்திரா, அவர் இருக்கும் இடத்தைப் பற்றி கவலை தெரிவித்தார். தீ பிடித்து எரியத்தொடங்கி பரவியபோது பிரகாஷ் கேமிங் மண்டலத்திற்குள் இருந்ததாகக் கூறினார். தடயவியல் துறையினர் அவர்களின் தாயிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்தனர். சோதனையில் தீயில் இறந்தவர்களில் பிரகாஷ் என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீயினால் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக, பல உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததால், ஹிரனை அடையாளம் காண்பதற்காக போலீசார் டிஎன்ஏ பரிசோதனையை செய்ய முடிவு செய்தனர்.
DNA Confirmed Prakash Hiran's Death
கேமிங் மண்டலத்தில் 60 சதவீத பங்குகளை வைத்திருந்த பிரகாஷ், ரேஸ்வே எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்தார். மேலும் அவர் குஜராத் காவல்துறையில் சிக்கியுள்ளவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்), ரேஸ்வே எண்டர்பிரைசஸ் பங்குதாரர்களான அசோக்சின் ஜடேஜா, கிரித்சின் ஜடேஜா, பிரகாஷ் ஹிரான், யுவராஜ்சிங் சோலங்கி மற்றும் தவல் எண்டர்பிரைசஸின் முதன்மைக் குற்றவாளி மற்றும் உரிமையாளரான தவல் தக்கர் உட்பட ஆறுபேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ராகுல் ரத்தோட். சோகமான தீ விபத்து ஏற்பட்ட விளையாட்டு மண்டலத்தை இவர்கள் கூட்டாக செய்து வந்தனர்.
ராஜ்கோட் விளையாட்டு மண்டலத்தில் 27 பேரின் மரணத்திற்கு காரணமான ராஜ்கோட் விளையாட்டு மண்டல தீ விபத்தை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குஜராத் அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு, 25 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும், அவர்களின் தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
DNA Confirmed Prakash Hiran's Death
யாருக்கும் அநீதி இழைக்கப்படாமல் இருக்க சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடத்த மாநில அரசு எங்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நாங்கள் இதுவரை முதற்கட்ட விசாரணை நடத்தி, விளையாட்டு மண்டலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி, மேலும் விசாரணை நடத்தி வருகிறோம். மாநில அரசால் உருவாக்கப்பட்ட எஸ்ஐடியின் தலைவரான மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி கூறினார்.
"2021 முதல் 2024ம் ஆண்டு வரையிலான அனைத்து கோப்புகளும் பல்வேறு தொடர்புடைய துறைகளில் இருந்து என் முன்னிலையில் எஸ்ஐடியால் கைப்பற்றப்பட்டன" என்று சங்கவி கூறினார்.
DNA Confirmed Prakash Hiran's Death
டிஎன்ஏ பகுப்பாய்வு தீயினால் சேதமடைந்த TRP விளையாட்டு மண்டலத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒன்பது உடல்கள் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்டமாக 27ம் தேதி ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவா மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி கமிஷனர் ஆனந்த் படேல் ஆகியோரை மாநில அரசு இடமாற்றம் செய்து அறிவித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu