/* */

தொண்டர்களை வீழ்த்தாமல் தி.மு.க.,வை வீழ்த்தவே முடியாது

கர்நாடகாவில் பா.ஜ.,வின் தோல்வி நிச்சயம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

HIGHLIGHTS

தொண்டர்களை வீழ்த்தாமல் தி.மு.க.,வை வீழ்த்தவே முடியாது
X

பைல் படம்.

கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.,வை வீழ்த்தி காங்., கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ., மீது மக்கள் கொண்ட வெறுப்பு தான் காரணம் என மோடியை பிடிக்காத பலர் விமர்சித்து வருகின்றனர். உண்மை அதுவல்ல என்பது விமர்சனம் செய்பவர்களுக்கும் தெரியும். அப்படியானால் பா.ஜ.,வை வெறுக்காத மக்கள் ஏன் தோற்கடித்தார்கள் என்ற கேள்வி எழும். நிச்சயம் காங்., கட்சியை விட பா.ஜ.,வை ஆதரிப்பவர்கள் தான் அதிகம். அப்படியிருந்தும் ஏன் கர்நாடகாவில் காங்., தோற்றது. பா.ஜ.,வின் ஆதரவு ஓட்டுகள் ஓட்டுப்பெட்டிக்கு வந்து சேரவில்லை. எதிர்ப்பு ஓட்டுகள் முறையாக பெட்டிக்கு வந்து சேர்ந்து விட்டது. நிச்சயம் வரும் தமிழகத்தில் வரும் லோக்சபா, சட்டபை தேர்தல்களிலும் இது தான் நடக்கும்.

பா.ஜ., அமெரிக்க பாணி அரசியல் செய்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை ஒருசில முக்கிய தலைவர்களை முன்நிறுத்தி ஓட்டு கேட்டது. பா.ஜ.,வின் ஆட்சியின் சிறப்புகள் மிக, மிக அதிகம். இவ்வளவு சாதகங்கள் இருந்ததால் கடந்த இருமுறையும் அந்த பாணி நிச்சயம் வெற்றி பெற்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் 17வது முறை பா.ஜ., வெற்றியை பறிகொடுத்துள்ளது. இதன் காரணத்தை தான் பா.ஜ., ஆராய வேண்டும்.

கர்நாடகாவில் தலைவர்கள் தான் பா.ஜ.,வில் அதிகம் உள்ளனர். கட்சியின் உள்கட்டமைப்பு இல்லை. காங்., கட்சிக்கு வலுவான உள்கட்டமைப்பு உள்ளது. தவிர முன்னாள் காங்., முதல்வர் சீத்தாராமையாவும், மாநில காங்.,தலைவர் சிவக்குமாரும் மிகத்தெளிவாக திட்டமிட்டு கட்சியின் உள்கட்டமைப்பினை சிறப்பான முறையில் வேலை வாங்கினர். ஒவ்வொரு வீடு, வீடாக காங்., உள்கட்சி கட்டமைப்பு நிர்வாகிகள் சென்று பா.ஜ.,வின் எதிர்ப்பு ஓட்டுக்களை பணம் கொடுத்தோ, ஏதாவது அன்பளிப்பு கொடுத்தோ, வாக்குறுதி கொடுத்தோ அந்த ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் ஓட்டுப்பெட்டிக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டனர். பா.ஜ., அதனை செய்யவில்லை. ரோடுகளில் மட்டும் மாஸ் காட்டியது. மோடிக்கு பூத்துாவி வரவேற்றதை தவிர வேறு எதுவும் சிறப்பாக செய்யவில்லை தேர்தலில் வார்டு வாரியாக, பூத் வாரியாக பா.ஜ.,விற்கு கட்சி கட்டமைப்பு இல்லாததால் தங்களது ஆதரவு ஓட்டுக்களை பெட்டிக்குள் கொண்டு வந்து சேர்க்காமல் வெற்றியை கோட்டை விட்டுள்ளது. குறிப்பாக காங்., கட்சியின் பலம் கட்சியின் உள்கட்டமைப்பு. பா.ஜ.,வின் பலம் தனி மனித மாஸ். அங்கு தனிமனித மாஸ் தோல்வியடைந்தது. கட்சியின் உள்கட்டமைப்பு தான் வென்றது.

தமிழகத்திலும் அதே நிலை தான் உள்ளது. பா.ஜ., தலைவர் அண்ணாமலையை அதிகம் பேர் விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலையை விரும்பும் ஒட்டுக்கள் அனைத்தையும் பெட்டிக்கு கொண்டு வந்து சேர்க்க பா.ஜ.,வில் எந்த உள்கட்டமைப்பும் இல்லை. மாவட்டந்தோறும் கட்சிக்கு தலைவர்கள் உள்ளனர். தொண்டர்களை ஒருங்கிணைக்கவும், வேலை வாங்கவும் ஆள் இல்லை. தொண்டர்கள் வேலை செய்தால் மட்டுமே அக்கட்சி வெற்றி பெறும். தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க.,விற்கும் தொண்டர்கள் பலம் அசுர சக்தி போல் உள்ளது.

பா.ஜ.,விற்கு தொண்டர்கள் பலமே இல்லை. தொண்டர்கள் உள்ளனர். ஆனால் ஒருங்கிணைக்கவும் வேலை வாங்கவும் கட்டமைப்பு இல்லை. நான் எடுக்க வேண்டிய ஆயுதம் எது என்று எதிரி தான் முடிவு செய்வான் என்பது சினிமா வசனம் மட்டுமல்ல. வாழ்வியல் உண்மையும் அதுதான். இங்கு தி.மு.க.,வை வீழ்த்த களத்தில் தி.மு.க., தொண்டர்களை வீழ்த்த வேண்டும். அதை செய்யாமல் அண்ணாமலை எரியும் அத்தனை அம்புகளும் கடலில் கலந்த பெருங்காயம் தான். இனியாவது கட்சி உள்கட்டமைப்பை பலப்படுத்தி, தொண்டர்களை வேலை வாங்குங்க... அண்ணாமலை. தி.மு.க., தொண்டர்களை வீழ்த்தாமல், தி.மு.க.,வை வீழ்த்தவே முடியாது. புரிந்து கொள்ளுங்கள்.

Updated On: 13 May 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு