டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : பிரதமர் மோடி எச்சரிக்கை..! அது என்னங்க டிஜிடல் அரெஸ்ட்..?
டிஜிட்டல் அரரெஸ்ட் -கோப்பு படம்
இந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, டிஜிட்டல் அரெஸ்ட் குறித்து விவரமாக விளக்கியது வரவேற்கத்தக்கது. என்ன தான் பிரதமரே சொன்னாலும், பலர் பதட்டத்தில் தவறுகளை செய்து விட்டு, பிறகு அரசை குற்றம் சொல்வது வழக்கமாகி விட்டது.
முதலில் டிஜிடல் அரெஸ்ட் என்றால் என்ன?
திடீரென ஃபோன் கால் மூலமாகவோ, வீடியோ கால் மூலமாகவோ, அரசின் ஏதாவது துறையில் இருந்து பேசுவதாக கூறி, உங்கள் மீது வழக்கு உள்ளது. இவ்வளவு பணம் கொடுத்தால், வழக்கிலிருந்து விடுவிக்கிறேன் என கடந்த ஒரு வருடத்தில் சுமார் 1700 கோடி வரை சுருட்டி உள்ளனர்.
இதனை டிஜிடல் அரெஸ்ட் என கூறுகின்றனர். ED, Cyber Cell, CBI, NIA போன்ற பல துறைகளை கூறி, இதுபோன்ற ஃபோன் கால்கள் வருகின்றன. படிக்காதவர் மட்டும் அல்ல, படித்தவர்கள் கூட இதில் பலியாவது தான் வேடிக்கை. சமீபத்தில் நீதிமன்றத்தில் வேலை செய்பவர் கூட இதுபோன்ற ஏமாற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இதனை செய்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து செய்வதால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. இப்படி இந்தியர்களை நோக்கி பல வெளிநாட்டு கைக்கூலிகள் படையெடுத்து மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இவர்கள் இருப்பதாலும், அந்த நாட்டின் தொழில்நுட்ப தொடர்புகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுவதாலும், குறிப்பாக இந்தியாவுடன் ஒத்துழைக்காத சீனா, துருக்கி, கனடா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து குற்றவாளிகள் செயல்படுவதாலும், இவர்களை கைது செய்வது சவாலான செயலாக உள்ளது.
ஆனால் இவர்களிடம் சிக்காமல் தப்புவது மிகவும் எளிதான வேலை அல்லவா? இதனால் தான் தனது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியே டிஜிட்டல் அரெஸ்ட் குறித்து அறிவுரை வழங்கி உள்ளார்.
மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் கூறியது: அமைதியாக, பதற்றமடையாமல், முடிந்தால் அந்த கால்களை ரெக்கார்டிங் செய்யுங்கள். எந்த ஒரு அரசு ஏஜென்சிக்கும் இதுபோல செய்ய அனுமதியில்லை. நேரடியாக அரெஸ்ட் வாரண்ட் அல்லது விசாரணை செய்ய அத்தாட்சியுடன் மட்டுமே செல்வார்கள். எந்த விசாரணை அல்லது அரெஸ்டுக்கு பணம் வாங்குவது, கொடுப்பது சட்டப்படி குற்றம்.
நீங்கள் குற்றவாளி இல்லாத பட்சத்தில் தைரியமாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனடியாக சென்று கம்ப்ளெயின்ட் பதிவு செய்யுங்கள். பணம் கொடுத்து உங்களை வழக்கில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியும் என கனவு காணாதீர்கள். எந்த வழக்கும் உடனடியாக முடியாது, வேறு அதிகாரிகள் அதனை மீண்டும் கையில் எடுப்பார்கள் என்று கூறியுள்ளார். நமது நாட்டின் பிரதமரே சொல்லி சொல்லிவிட்டார்.
இனியாவது உஷாராக இருங்கள். மோடி என்ன செய்தார் என கதறிக் கொண்டு இருக்க வேண்டாம். இதுபோன்ற விஷயங்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிந்தால் மட்டுமே சில நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஏற்கனவே பல ஆயிரம் ஃபோன் நம்பர்கள் முடக்கப்பட்டுள்ளன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப், ஸ்கைப் போன்ற நிறுவனங்கள் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும் வெளிநாட்டு குற்றவாளிகளை அந்த நாடு ஒப்படைக்காதவரை இதெல்லாம் தொடரும். எனவே நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu