மத்திய இலங்கையில் என்ன செய்கிறது இந்தியா?

மத்திய இலங்கையில் என்ன செய்கிறது இந்தியா?
X

இலங்கை மலையக மக்களுக்கான நிகழ்ச்சியில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

இலங்கையில் இந்தியா ஆக்கபூர்வமான நகர்வை நோக்கிய செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. அது வளர்ச்சிக்கானது.

இலங்கை தந்திரமான நாடு என்பது உலகறிந்தது. ஆனால் அந்த தந்திரத்தால் என்ன சாதித்தார்கள் என்றால் ஒன்றுமில்லை. இன்னும் திருந்தினார்களா என்றால் இல்லை. அவர்கள் அப்படித் தான்.

அங்கே ஒருகாலத்தில் அமெரிக்கா பாகிஸ்தானை கூட்டிகொண்டு சென்று குழப்பம் விளைவித்தபோது இந்தியா ஈழத் தமிழர் ஊடாக நுழையப் பார்த்தது. போராளிகளுக்கு பயிற்சி, போர் என அது இறங்கி கடைசியில் அது 1500 இந்திய வீரர்கள் சாவு, ராஜிவ் கொலை, பின் 2009 பேரழிவு என முடிந்தது.

இப்போது அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு அணிக்கு வந்த போது சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையினை வளைக்கின்றன. இப்போதும் மோடி அரசு ஏதாவது செய்தாக வேண்டிய நிலை. இப்போது தான் மிக முக்கிய பிரச்சினையினை இந்தியா தொடுகின்றது. அது மலையகத் தமிழர்கள் பிரச்சினை.

இலங்கையில் ஈழத் தமிழர் என்பவர்கள் பூர்வகுடிகள். இந்த மலையக தமிழர்கள் என்பவர்கள் இந்திய தமிழர்கள். பிரிட்டிஷார் ஆட்சியில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள். வலிக்கும் உண்மை என்னவென்றால் இலங்கையில் இவர்கள் கடைநிலை மக்கள். இவர்களை சிங்களதரப்பும் கைவிடும், ஈழதமிழரும் கைவிடுவார்கள்.

இவர்கள் இருவராலும் புறக்கணிக்கபட்டவர்கள். இன்னும் வலிக்கும்படி சொன்னால் ஒருகாலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லபட்ட அடிதட்டு மக்கள் இவர்கள். வறுமையில் வாடி வெறுமையாக இருந்த காலத்தில் வாழ்வு தேடி சென்ற மக்கள்.

ஆச்சரியமாக இவர்களை இந்தியாவின் தலித் இயக்கம், சாதி ஒழிப்பு இயக்கம் என எதுவும் கண்டுகொள்ளாது அல்லது இப்படி ஒரு இனம் இருப்பதே தெரியாது. ஈழத் தமிழருக்கு நாடு என புலிகள் வெளியிட்ட வரைபடத்தில் இவர்கள் பிரதேசமே வராது. இவர்களும் வரமாட்டார்கள்.

காரணம் ஈழத் தமிழர் வசதியானவர்கள். அவர்களைப் பற்றி பேசினால் பணம் வரும். இவர்களைப் பற்றிப் பேசினால் எதுவும் வராது என்பதால் அரசியல்வாதிகள் இங்கே செல்ல மாட்டார்கள்.

இந்த இனத்துக்கான முதல் அநீதி இலங்கையில் நேரு காலத்தில் நடந்தது. 1960களில் மலையக மக்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஒருகட்டத்தில் இவர்கள் வாக்கு ஆதிக்கம் செலுத்தலாம் என அஞ்சிய ஈழத் தமிழரும் சிங்களவரும் இணைந்து இவர்களில் 5 லட்சம் பேரை நாடற்றவர் என அறிவித்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்த மக்கள் அந்நாட்டின் குடிமக்கள் என்பது சர்வதேச சட்டம். ஆனால் நேருவும் இம்மக்களை திரும்பப் பெற்று தமிழக அகதிகளாக்கினார்.

அந்த அளவுக்குத்தான் காங்கிரஸின் பலம் இருந்தது. உங்கள் நாட்டில் அவர்களை உங்கள் குடிமக்களாக வைக்காவிட்டால் என சீறவில்லை. 1960களில் இவர்கள் பிறந்தநாட்டால் விரட்டப் பட்டு தமிழகம் வந்தபோது உருவானதுதான் டேன் டீ என்கிற தேயிலைத்தோட்டங்கள்.

இம்மக்களை இலங்கையில் இருந்து சிங்களர் விரட்டியபோது ஒரு ஈழத் தமிழரும் தடுக்கவில்லை அதெல்லாம் வலிமிக்க வரலாறு. இப்படியான பரிதாபமான பின்னணி கொண்ட அபலைகளை உலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

மோடி 2014ல் ஆட்சிக்கு வந்தபின்பே இவர்கள்மேல் இந்தியா கரிசனம் காட்டிற்று. ஹட்டனில் பெரும் மருத்துவமனை ஒன்றை இந்தியா கட்டிகொடுத்தது. மோடி நேரடியாக மலையகம் சென்றார். மலையகம் சென்ற முதல் இந்திய பிரதமர் அவர் தான். இந்திய பிரபலமும் அவர்தான்.

பின் மலையக மக்களுக்கு பல நல்வாழ்வுதிட்டங்களை இந்தியா அறிவித்தது. பெரும் உதவிகள் கிடைத்தன. இப்போது மலையக மக்கள் தாங்கள் இலங்கை வந்த 200ம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகின்றார்கள். ஒருவிஷயம் கவனிக்கவேண்டும், பிரிட்டிஷ்காரன் அதைகொடுத்தான் கல்வி கொடுத்தான் என்பதெல்லாம் பெரும் பொய். அவன் தனக்கு உழைக்க ஒரு அடிமை கூட்டத்தை உருவாக்கினான். அதை இலங்கையில் அனாதையாக விட்டுவிட்டுச் சென்றான்.

அந்த தாழ்த்தப்பட்ட மக்களை சாதிக் கொடுமையில் இருந்து விடுவிக்கின்றேன் என அழைத்துச் சென்றவன். அங்கே இரு இனங்களுக்கு அடிமையாக விட்டுவிட்டு ஓடிவிட்டான்.

பிரிட்டிஷார் ஆட்சியின் அவலத்துக்கு அவர்கள்தான் சாட்சி.அந்த மக்களின் 200ம் ஆண்டுவிழாவில் இந்திய அரசு நேரடியாக கலந்து கொள்கின்றது. மத்திய அரசின் சார்பில் அமைச்சர் நிர்மாலா சீதாராமன் , தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் பத்தாயிரம் வீடுகளை அவர்களுக்கு கட்டித்தர இந்தியா உறுதியளித்திருக்கின்றது. மலையக மக்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றனர். இது அரசியலாக இருக்கட்டும். சீனாவினை அடக்க இந்தியா செய்யும் முயற்சியாக இருக்கட்டும். எதுவுமாக இருக்கட்டும். ஆனால் மலையக மக்களை காங்கிரஸ் நினைக்கவில்லை. திமுக நினைக்கவில்லை, தமிழக சில்லறை கட்சிகள் நினைக்கவே இல்லை.

அந்த தமிழர்களை நினைத்து கைதூக்கிவிடும் ஒரே தலைவர் மோடி தான். இந்த விழா விசேஷமாக நடந்தது. இலங்கையின் அதிபர் ரணிலும் கலந்து கொண்டார்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் துணை இந்திய தூதரகம் , பலாலி விமான நிலையம், காங்கேசன் துறைக்கு கப்பல், வட இலங்கையின் சூரிய மின்சாரம் என இந்தியா கடுமையாக காலூன்றிய நிலையில் மத்திய இலங்கைக்குள்ளும் ஆதிக்கம் செய்கின்றது என்பது தெரிகின்றது.

இங்கே அவதானித்து விஷயத்தை கொஞ்சம் வாய்மூடி நமட்டு சிரிப்போடு கடக்கலாம். ஆம், நடந்தது இலங்கையில் தமிழருக்கான நலத் திட்டம், அதுவும் இலங்கை வரலாற்றிலே முதன் முறையாக மலையக மக்களுக்கான, இந்திய தமிழக வம்சாவளிக்கான் திட்டம்.

அங்கே பலனடைபவர்கள் தமிழ் மக்கள் அதுவும் உண்மையான தொப்புள்கொடி தமிழர்கள். ஆனால் அந்த விழாவில் தமிழின தலைவர்கள் என பேசப்படுபவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆக சொந்தத் தமிழர்கள் என்றாலும் காசு இல்லா ஏழைகள் என்றால் இவர்கள் பேசமாட்டார்கள். இனி மலையை மக்களின் நிலைமை உயரும் என்று நம்புவோம்.

நன்றி: Stanley Rajan

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!