Declining fertility rate-கருத்தரிப்பு விகிதம் குறைவது ஏன்? ஆய்வுகளில் அதிர்ச்சி..!
கருவுறாமை (கோப்பு படம்)
Declining fertility rate
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
தொடர்ந்து கோவா, தில்லி, சிக்கிம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளது. 'பிஎல்ஓஎஸ் ஒன்'(PLOS ONE) என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 'இந்தியாவில் கருத்தரிப்பு விகிதம் குறைவு மற்றும் அதன் நடத்தைகள்' என்பதன் அடிப்படையில் 1992 முதல் 2016 வரை தேசிய குடும்ப நல ஆய்வுகளின் நான்கு சுற்று ஆய்வுகளுக்குப் பிறகு கிடைத்த இரண்டாம் நிலைத் தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
திருமண வயது, உயிரியல் காரணிகள், வாழ்க்கை முறை காரணிகள், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் சுகாதார நடைமுறைகள் உள்ளிட்டவை கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளதற்கான காரணங்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
'ஆண்களுடன் ஒப்பிடுகையில் குழந்தையின்மையால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் உளவியல், குடும்பம் மற்றும் சமூக அழுத்தங்களை அவர்கள் அதிகம் எதிர்கொள்கின்றனர்.
பலருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது, பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் கருத்தரிப்பு விகிதம் குறைவதற்கும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கருக்கலைப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றன' என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் மும்பையில் உள்ள சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் கீழ் உள்ள சமூக மருத்துவம் மற்றும் சமூக நல மையம் நடத்திய ஆய்வில், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் போதுமான, நவீன மருத்துவ வசதிகள் இல்லாததால் வளரும் நாடுகளில் குழந்தையின்மை விகிதம் அதிகமாக உள்ளதாகக் கூறுகிறது.
1981, 1991, 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இனப்பெருக்க வயதுள்ள தம்பதிகளின் கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. 1981ல் 13% ஆகவும் 2001ல் 16% ஆகவும் இது அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் 1998--99 மற்றும் 2005-06ம் ஆண்டுகளில் கருத்தரிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. சமீப காலமாக திருமணமான பெண்களில் 8% பேர் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கருத்தரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5.8% பேர் இரண்டாம் நிலை கருத்தரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில், சுமார் 8-12 சதவீத தம்பதிகள் கருத்தரிப்பினால் பாதிக்கப்படுவதாகவும், அதன் விகிதம் உலகளவில் மாறுபடுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu