அடல்சேது பாலத்தில் விரிசலா? மும்பை அதிகாரி விளக்கம்..!
அடல் பாலத்தை இணைக்கும் சாலையில் ஏற்பட்டுள்ள விடிசலை ஆய்வு செய்யும் காங்கிரஸ் தலைவர் நானா படோல்
Cracks On Atal Setu
நவி மும்பையில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவா சேவா அடல் சேது நகரை இணைக்கும் சர்வீஸ் சாலையில் சில சிறிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சர்வீஸ் சாலை என்பது அடல் சேதுவிற்கும் நகரத்திற்கும் இடையிலான தற்காலிக இணைப்புப் பாதையாகும்.
Cracks On Atal Setu
அடல் சேது என்று அழைக்கப்படும் இந்த கடல் பாலம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
விரிசல்கள் பற்றிய அறிக்கைகள் வெளிவந்தவுடன், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் அந்த இடத்தை ஆய்வு செய்து தனது கவலைகளை வெளிப்படுத்தினார். இது மக்களின் பாதுகாப்பிற்கு சாத்தியமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்று கவலை வெளியிட்டார்.
இந்த இணைப்பு சாலை சமீபத்தில் கட்டப்பட்டது. ஆனால் அதற்குள் இதைப்போன்ற விரிசல்கள் ஏற்பட்டுளளது கட்டம்மைப்பின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இது பொதுமக்களுக்கு ஆபத்தாக முடியலாம். அதனால் இது பொது பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புவதாக காங்கிரஸ் தலைவர் கூறினார்.
Cracks On Atal Setu
மழை காரணமாக சிறு விரிசல்கள்: மும்பை அதிகாரி விளக்கம்
இதற்கிடையில், விரிசல்கள் தோன்றியதில், அடல் சேது திட்டத் தலைவர் கைலாஷ் கணத்ரா முதலில் விளக்கமளித்தார், புதிதாக திறக்கப்பட்ட அடல் சேதுவில் விரிசல்கள் தோன்றவில்லை. ஆனால் அதை நகரத்துடன் இணைக்கும் சர்வீஸ் சாலையில்தான் ஏற்பட்டுள்ளது.
கடற்கரை சாலை இல்லாததால் கடைசி நேரத்தில் தற்காலிக இணைப்பு பாதையாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது என்றார்.
விரிசல்கள் குறித்து கணத்ரா கூறுகையில், மழையால் ஏற்பட்ட சிறிய விரிசல்கள், நாளை மாலைக்குள் சரி செய்யப்பட்டுவிடும்.
Cracks On Atal Setu
பொதுவாக மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் (MTHL) என்று அழைக்கப்படும் அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி நவா ஷேவா அடல் சேது, இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும். இது 21.8 கிமீ நீளம் கொண்டது, குறிப்பிடத்தக்க பகுதி கடலுக்கு மேல் விரிவடைந்து 16.5 கிமீ அளவு கொண்டது. . தினசரி 70,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் முக்கியமான பாதையாக இது விளங்குகிறது.
அராரியா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்னதாக இடிந்து விழுந்ததால் பீகாரின் ஊரகப் பணித் துறையைச் சேர்ந்த மூன்று பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது.
பாலத்தின் கட்டுமானப் பொறுப்பை மாநில அரசு ஏற்றுக்கொண்டது. அணுகு சாலைகள் இன்னும் கட்டப்படாமல் இருந்ததால், அது இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை.
சர்வீஸ் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல் வீடியோ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu