1:406 பயங்கர மேட்டர்: என்னங்க இது??

1:406 பயங்கர மேட்டர்:  என்னங்க இது??
X

கொரோனா பரவாமல் இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.

ஒரு கொரோனா நோயாளி விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் 406 பேருக்கு நோயை பரப்புவார் என்று மத்திய அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

ஒரு கொரோனா நோயாளி சமூக விலகல், தனிமைப்படுத்திக்கொள்ளல் போன்றவைகளை முறையாகக் கடைப்பிடிக்காமல் இருந்தால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா தொற்றைப் பரப்புவார் என்று மத்திய அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை மிக மோசமான நிலையை அடைந்து தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.23 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ள அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் கூட தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில் பல பல்கலைக்கழங்கள் கொரோனா நோயாளிகள் குறித்து நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு கொரோனா நோயாளி சமூக விலகல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்றாவிட்டால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 406 பேருக்கு கொரோனா தொற்று பரவக்கூடும்.

அதேசமயம், அந்த கொரோனா நோயாளி சமூக விலகலைக் கடைப்பிடித்து, கொரோனா தடுப்பு விதிகளை 50 சதவீதம் வரை கடைப்பிடித்தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.அதே கொரோனா நோயாளி, சமூக விலகல் விதிகளையும், கொரோனா கட்டுப்பாடுகளையும் தீவிரமாகக் கடைப்பிடித்தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 2 அல்லது 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஒருபுறம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மற்றும் நிர்வாக முறையும், மற்றொரு புறம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது. ஆதலால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறினால், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் 6 அடி இடைவெளி விட்டு நின்று பேசினால் கூட தொற்றுக்கு ஆளாகாதவர் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது. இதுவே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா நோயாளிகள், முறையாக முகக்கவசத்தை அணியாவிட்டால், கொரோனா நோயாளியிடம் இருந்து 90 சதவீதம் பாதிக்கப்படாத நபர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

தொற்றால் பாதிக்கப்படாத ஒருவர் முகக்கவசம் அணிந்து, முகக்கவசம் அணியாத கொரோனா நோயாளியுடன் பேசினால், 30 சதவீதம் தொற்றால் பாதிக்கப்படாத அந்த நபருக்கு கொரோனா பரவ வாய்ப்பு உளளது. அதேசமயம், தொற்றுக்கு ஆளான நபரும், தொற்றால் பாதிக்கப்படாத நபரும் முகக்கவசம் அணிந்திருந்து பேசினால், 1.5 சதவீதம் மட்டுமே தொற்றால் பாதிக்கப்படாத நபர் கொரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்