பாலிவுட்டில் இந்தி இளம் நடிகர் கொரோனாவுக்கு பலி

பாலிவுட்டில் இந்தி இளம் நடிகர் கொரோனாவுக்கு பலி
X

கொரோனாவுக்கு பலியான நடிகர் ராகுல் வோஹ்ரா

இந்தி இளம் நடிகர் கொரோனாவுக்கு பலி ஆனார்.

நடிகரும், யூடியூபருமான ராகுல் வோரா டெல்லி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் இறந்தார். அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக பகிரப்பட்ட ஒரு பேஸ்புக் பதிவின் மூலம் அவரது மரணத்தின் வலி உணரப்பட்டுள்ளது.

அந்த பதிவில் அவருக்கு சரியான நேரத்தில் மருத்துவ சேவை கிடைத்திருந்தால் அவர் வாழ்ந்திருப்பார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ராகுலுக்கு வயது 35 மட்டுமே. அவரது மனைவி ஜோதி திவாரியும் இதையே குறிப்பிட்டுள்ளார். அவருக்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்று ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

நாடக ஆசிரியர் அரவிந்த் கவுர் தனது சொந்த பேஸ்புக் பக்கத்தில், ' ராகுல், கோவிட் உடனான போரில் தோல்வியடைந்து போனார். ராகுல் வோரா போய்விட்டார். எனது நம்பிக்கைக்குரிய நடிகர் இல்லை என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

நேற்று மாலை அவர் டில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து ஆயுஷ்மான், துவாரகாவுக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு