கோவின் இணையதளத்தில் இரண்டு நாட்களில் தமிழும் இடம்பெறும் என மத்திய அரசு உறுதி
கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில் கோவின் இணையதளத்தில் இரண்டு நாட்களில் தமிழும் இடம்பெறும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள போது தமிழ்வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந் நிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதன்படி இந்தக் கோரிக்கையை மத்திய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் வலியுறுத்தினார்.
அப்போது, இந்த இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது கோவின் இணையதளத்தில் இரண்டு நாட்களில் தமிழும் இடம்பெறும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu