கொரோனா மற்றும் திரிபுகளின் அறிகுறிகள் என்னென்ன..? தமிழில் விளக்கம்..!

கொரோனா மற்றும் திரிபுகளின் அறிகுறிகள் என்னென்ன..? தமிழில் விளக்கம்..!
X

corona symptoms in tamil-கொரோனா பரவுதல் மற்றும் தடுப்பு முறைகள் (மாதிரி படம்)

corona symptoms in tamil-கொரோனா மற்றும் திரிபுகளின் அறிகுறிகள் என்னென்ன என்பது இங்கு தரப்பட்டுள்ளது.

corona symptoms in tamil-இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில தினங்களாக சற்று அதிகரித்து வருகிறது. ஆனாலும் இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதே பாதுகாப்புக்குரியது.

கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த கட்டுரைமூலமாக தெளிவு பெறலாம்.

2020ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி கேரளாவில் 2 இடங்களில் முதன்முதலில் இந்தியாவில் பரவத்தொடங்கியது. பின்னர் கொரோனா வைரசில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகள் மூலம் புதிய வகை கொரோனா வைரஸ் 'திரிபு' (variant) உருவாகிறது. இதுவரை உலகம் முழுவதும் பல்வேறு திரிபுகள் உருவாகியுள்ளன.

கொரோனா தொற்றின் அறிகுறிகள் என்ன?

  • தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடர்ந்து இருப்பது, அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர்ந்து இருமல் இருப்பது.
  • உச்சநிலை காய்ச்சல். உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியஸ் - ஐ விட அதிகமாக இருக்கும்.
  • வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.
  • சிலருக்கு தீவிரமான சளி இருப்பதைப் போல தோன்றலாம் என்று ஆய்வாளர்கள் கூறுன்கின்றனர்.

இதற்கு முன்பு மிகவும் பரவலான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா திரிபு மற்றும் தற்பொழுது உலக நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் திரிபு ஆகியவற்றுடன் அவர்களது அறிகுறிகளுக்கு உள்ள தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஒமிக்ரான் தொற்று:

இந்த 5 அறிகுறிகளும் தென்பட்டன. அவை

  • மூக்கு ஒழுகுதல்
  • தலைவலி
  • லேசான அல்லது தீவிரமான உடற்சோர்வு
  • தும்மல்
  • தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை எரிச்சல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களில் குறைந்தது 85% பேருக்கு மேற்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. ஒருவருக்கு இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்வது கொரோனா வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

கோவிட்-19 முதன்முதலில் காய்ச்சலில் தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறிவிட முடியாது. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸ் தொற்றாலும் ஏற்படக்கூடியவை.

கொரோனா வைரஸ்:

கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால் ஒருவரின் உடலில் தொற்று உண்டான நேரத்தில் இருந்து வெளியே தெரிய சராசரியாக ஐந்து நாட்கள் ஆகலாம். அதிகபட்ஷம் 14 நாட்கள் வரை கூட ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அமெரிக்க அரசு கூறும் 10 கொரோனா அறிகுறிகள்

இந்த அறிகுறிகள் இருந்தால் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க அரசின் வழிகாட்டுதல் கூறுகிறது.

  • குளிர் - காய்ச்சல்
  • சளி
  • குறைவாக மூச்சு வாங்குதல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம்
  • உடல் சோர்வு
  • தசை அல்லது உடல் வலி
  • தலைவலி புதிதாக சுவை அல்லது வாசனை உணர முடியாமல் போகுதல்
  • தொண்டை எரிச்சல் அல்லது தொண்டை கரகரப்பு
  • மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்
  • குமட்டல் அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு
  • வயிற்றுப்போக்கு

இந்த அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும். இதற்கு காரணம் வெவ்வேறு நபர்களின் உடல்களில் வெவ்வேறு பாகங்களை கொரோனா வைரஸ் தாக்கும் என்பதுதான்.

ஜீரண மண்டலத்தில் அறிகுறிகள்: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு.

உடல் சோர்வு (முதல் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச முடியாமல் போவது போன்ற உணர்வு, உடல் சோர்வு.

குழப்பநிலை (இரண்டாம் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச முடியாமல் போவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, தெளிவாக சிந்திக்க இயலாமல் போகும் மனநிலை.

வயிறு மற்றும் சுவாசக் கோளாறு மிக தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச முடியாமல் போவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம்.

கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு தாமதமாக தெரியலாம் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென்படுவதற்கு முன்னரே தொற்று பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

டெல்டா திரிபின் அறிகுறிகள் :

டெல்டா திரிபு முதன் முதலாக அக்டோபர் மாதம் 2020ம் ஆண்டில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் உண்டான கொரோனா இரண்டாம் அலைக்கு எளிதில் பரவும் தன்மை உள்ள இந்தத் திரிபும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

தலை சுற்றல், வறண்ட தொண்டை, தொடர் சளி போன்ற அறிகுறிகள் கொரோனா டெல்டா வகை திரிபு பாதிப்புடையவர்களிடம் பொதுவாக காணப்படுகின்றன என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஆராய்ச்சிப் பணிகளில் பெரிதும் உதவிய ஸோ கோவிட் ஆய்வு எனப்படும் லாபநோக்கமற்ற செயலியை நிறுவியுள்ள பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், இளம் வயதினருக்கு மோசமாக சளி இருந்தால் அதை டெல்டா திரிபு என்பதை புரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா திரிபின் அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர் உடல்நிலை மோசமடைவதை உணராமல் போனாலும், அது அவரது நிலையை மோசமாக்கி ஆபத்தான நிலைக்கு தள்ளி விடும் என்றும் அவர் கூறுகிறார்.

எனவே, கொரோனா இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தால், உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பேராசிரியர் டிம் தரும் முக்கிய அறிவுரை.

உலக சுகாதார நிறுவனம் கூறும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் :

அறிகுறிகள் இல்லாமல் சிலநேரம் வயிற்றுப்போக்கு உண்டாவதும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) ஒரு கொரோனா அறிகுறியாகும்.

குழந்தைகளுக்கான கொரோனா அறிகுறி?

வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பகுதியில் தசை பிடிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டாவதற்கான அறிகுறிகள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இருமல் இருந்தால் மட்டுமே கோவிட்-19 அறிகுறியா?

பல வைரஸ் தொற்றுகளுக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று போன்றே அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக இந்த அறிகுறிகள் குளிர் காலத்தில் பரவலாக காணப்படும். கொரோனா வைரஸ் தொற்றின் மூன்று முக்கிய அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கலாம். பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். வேறு வைரஸ் தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக பரிசோதனை செய்யாமல் விடக்கூடாது. பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

எப்போது மருத்துவமனைக்கு செல்லவேண்டும்?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், போதிய ஒய்வு மற்றும் பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டாலே போதும். அவர்கள் குணமாகிவிடுவார்கள். ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முக்கிய காரணம் சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனையே.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால்..?

பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலை பரிசோதிக்கும் மருத்துவர்கள், அது எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை கண்டறிந்து, பிராணவாயு சிகிச்சை அல்லது வெண்டிலேட்டர் சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார்.

தீவிர சிகிச்சை பிரிவில் எப்படி சிகிச்சை, அளிப்பார்கள்?

இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்படும் எல்லா மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படும். மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படும் பிராணவாயுவின் அளவு மற்றவர்களுக்கு வழங்கப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு வென்டிலேட்டர்கள் மூலம் சுவாசப்பிரச்னையை சீர்செய்ய துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!