கொரோனா 2வது அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு : ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு
கர்ப்பிணிப்பெண் (மாதிரி படம்)
நமதும் நாட்டில் கொரோனா 2வது அலை பரவலில் கர்ப்பிணிப்பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் தொற்று பரவலில் கர்ப்பிணிகளுக்கு இவ்வளவு பாதிப்பு வரவில்லை. ஆனால், 2வது அலையில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
2வது அலையில் இந்தியாவில் இப்போது வரை 387 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 111 கர்ப்பிணிகளுக்கு தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சதவீத அடிப்படையில் 28.7 சதவீதம் பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், முதல் அலையில் 1,143 கர்ப்பிணிகள் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 162 பெண்களுக்கு (14.2 சதவீதம் பேருக்கு) மட்டுமே தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது. இதுவே முதல் அலையில் 0.7 சதவீதமாக (8 பேர் உயிரிழப்பு) இருந்த கர்ப்பிணி பெண்களின் இறப்பு விகிதம், 2வது அலையில் 5.7 சதவீதமாக (22 பேர் உயிரிழப்பு) அதிகரித்துள்ளது. இவ்வாறு ஐ.சி.எம்.ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu