ஆன்லைன் செயலி வாயிலாக மதமாற்றம்

ஆன்லைன் செயலி வாயிலாக மதமாற்றம்
X

பைல் படம்

ஆன்லைன் செயலி வாயிலாக சிறுவர்களை மதமாற்றம் செய்த கும்பலை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஆன்லைன் விளையாட்டு செயலி வாயிலாக சிறுவர்களை குறிவைத்து மதம் மாற்றும் கும்பலின் மோசடியை உத்தர பிரதேச போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவரை தேடி, உ.பி., போலீசார், மஹாராஷ்டிராவுக்கு விரைந்துள்ளனர்.

உ.பி.,யில் 'பார்ட்நைட்' என்ற 'ஆன்லைன்'விளையாட்டு செயலி, சிறுவர்களிடையே பிரபலமாக உள்ளது. சமீப காலமாக இந்த செயலியை பயன்படுத்தி விளையாடும் சிறுவர்கள் சிலர், மதம் மாற்றப்பட்டதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர். இதன் அடிப்படையில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில், சிறுவர்களை குறிவைத்து ஒரு கும்பல் மிகப் பெரிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்த முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்டது, மஹாராஷ்டிரா மாநிலம் தானேயைச் சேர்ந்த ஒருவர். இவரைத் தேடி மஹாராஷ்டிராவுக்கு போலீஸ் படை விரைந்து உள்ளது. அவர் கைது செய்யப்பட்டால், இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!