பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் மாநாடு: புதுதில்லியில் நடக்கிறது

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் மாநாடு: புதுதில்லியில் நடக்கிறது
X

பைல் படம்

பயங்கரவாதத்திற்கு பணம் கிடைக்கக் கூடாது என்ற கருப்பொருளில் 3வது அமைச்சர்களின் மாநாடு நவ 18 , 19 -ல் நடைபெறுகிறது

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் 3-ஆவது மாநாடு புதுதில்லியில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது

சர்வதேச பயங்கரவாத பிரச்னை குறித்து மோடி அரசின் முன்னெடுப்புகளின் முக்கியத்துவத்தையும், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக சகிப்புத் தன்மையற்ற கொள்கைகள் பற்றியும், சர்வதேச அரங்கில் பேச்சு வார்த்தைகளை நடத்துவதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா மாநாட்டில் பங்கேற்று, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவின் உறுதிப் பாட்டையும், அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் நம் நாட்டின் ஆதரவைப் பற்றியும் எடுத்துரைப்பார்.

இதற்கு முன்பாக சர்வதேச அளவில் பாரிஸ் (2018) மற்றும் மெல்போர்னில் (2019) நடைபெற்ற இரண்டு மாநாடுகளில், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவாதப் பொருளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாகும். மேலும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிராக தொழில் நுட்பம்‌, சட்டம், ஒழுங்கு முறை மற்றும் அனைத்து ஒத்துழைப்பு அம்சங்கள் பற்றியும் விவாதிக்கபடும்.

உலகளவில், பல ஆண்டுகளாக பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தால் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வன்முறைகளின் வடிவம் வேறு, வேறாக இருந்தாலும், புவி-அரசியல் அமைப்பில் நீண்ட, நெடிய இனப் போராட்டங்கள் நடைபெற்று மோசமான சூழ்நிலை நிலவுகிறது. நிர்வாகச் சீர்கேடு, அரசியல் நிலைத்தன்மை இல்லாமை, பொருளாதார பின்னடைவு மற்றும் கட்டுக்கடங்காத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.

இதன் விளைவாக இணக்கமில்லாத நாடு பயங்கரவாதத்தை ஆதரித்து, அதற்கான நிதியுதவியை அதிகப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியா பல்வேறு வகையான பயங்கரவாதங்கள் மற்றும் அதற்கான நிதி ஆதாரங்களின் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்தித்துள்ளது. அதனால் இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளான நாடுகளின் வலியையும், பாதிப்புகளையும் இந்தியா நான்கு உணர்ந்துள்ளது.

அமைதியை விரும்பும் நாடுகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், பயங்கரவாத நிதியுதவியை எதிர்கொள்வதில் உறுதியான ஒத்துழைப்புக்கான பாலத்தை உருவாக்கவும், இந்தியா அக்டோபரில் இரண்டு உலகளாவிய நிகழ்வுகளை நடத்தியது. புதுதில்லியில் சர்வதேச காவல் துறையின் வருடாந்திர பொதுக் குழு மற்றும் ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் சிறப்பு கூட்டத்தை மும்பை மற்றும் புதுதில்லியில் நடத்தியது. பயங்கரவாதத்திற்கு பணம் கிடைக்கக் கூடாது என்ற கருப் பொருளில் அமைச்சர்களின் 3-ஆவது மாநாட்டை நவம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறது. இந்த மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான நாடுகளுக்கிடையே நல்ல புரிந்துணர்வையும், ஒத்துழைப்பையும் நட்பையும் அதிகரிக்கும்.மேலும் இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சார்ந்த பிரதி நிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சார்ந்த பிரதி நிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil