இதோ ஒரு புது பதவி உருவாக்கம் .... CIO- Chief Investigating Officer....

இதோ ஒரு புது பதவி உருவாக்கம் ....  CIO- Chief Investigating Officer....
X
CBI, ED இரண்டையும் இணைத்து, CIO - CHIEF INVESTIGATING OFFICER என்ற புதிய பதவி உருவாக்கப்படுகிறது.

CBI, ED இரண்டையும் இணைத்து, CIO - CHIEF INVESTIGATING OFFICER என்ற புதிய பதவி உருவாக்கப்படுகிறது. அமலாக்கத் துறை, CBI -... இவற்றின் கீழ் பல சிக்கலான வழக்குகள் வருகின்றன. பொதுவான வழக்குகளும் வருகின்றனவாம். அதனால், அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு சிரமமாக இருக்கிறதாம். அதனால், இவற்றை ஒருங்கிணைக்க, அவற்றுக்கு மேல் CIO என்று ஒரு பதவி உருவாக்கப்படுகிறது. ED, CBI இரண்டும் ClOவுக்கு இனிமேல், report செய்ய வேண்டும். CIO பிரதமருக்கு report செய்வார்.

இப்போதுதான், அடுத்த twist.

அமலாக்கத் துறையின் தலைவர் சஞ்சய் மிஸ்ராவுக்குத் தொடர்ந்து, பதவி நீடிப்பு செய்வது தவறு என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்து, மத்திய அரசைக் கண்டித்தது அல்லவா? பிறகு, மிகுந்த சிரமப்பட்டு, Sep 15 வரை அவர் பதவியில் நீடிக்க அனுமதி வாங்கியது அல்லவா?

இந்த Sep 15க்குள், CIO நியமிக்கப்படுவாராம். புது CIO வாக சஞ்சய் மிஸ்ரா நியமிக்கப்படுவா ராம். அமலாக்கத்துறைக்கு மட்டும் தலைவராக இருந்தவர், இப்போது ED, CBI இரண்டுக்குமே பொறுப்பை ஏற்றுக் கொண்டு விடுவார். இரண்டு பெரும் விசாரணை அமைப்புகளுக்கும் ஒரு வலுவான தலைவர் உருவாகி விட்டால், நாட்டின் அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்குகளை கையாள்வது மிகவும் எளிதாக முடிந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக தற்போது நடந்து வரும் நிர்வாக சூழல்களை கவனித்தால், விரைவில் பா.ஜ., மேலும் படி அதிரடிகளை உருவாக்கும். அரசியல் களத்தில் அடித்து ஆடத்தொடங்கும் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. ஆக இந்திய அரசியல் களத்தில் பா.ஜ.க வின் அடுத்த விக்கெட் யார் என்பதை பொறுத்திருந்து காணலாம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்