சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே திறப்பு தேதி எப்போது தெரியுமா?

சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே  திறப்பு தேதி எப்போது தெரியுமா?
X

பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை (BCE) (கோப்பு படம்) 

262-கிமீ நீளமுள்ள பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை (BCE) முடிவடையும் தருவாயில் உள்ளது.

கர்நாடகா மாநிலம் உள்ளே வரும் சாலையில் பணிகள் முடிக்கப்படவில்லை. இதற்கான டார்கெட் மிஸ் ஆகி உள்ளது. இதனால் கண்டிப்பாக சாலை 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் திறக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

2025ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் இந்த சாலை திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய பயண நேரமான ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துடன் ஒப்பிடும் போது,பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இந்த புதிய சாலை இரண்டு முதல் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 80 கி.மீ., வரை குறைக்கும். அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 கி.மீ.

BCE திட்டம் என்று அழைக்கப்படும் சென்னை - பெங்களூர் சாலை அதிகாரப்பூர்வமாக NE-7 என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும்.

இந்த நெடுஞ்சாலை 240 கிமீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையாக இருக்கும், மீதமுள்ளவை 22 கிமீ உயரம் கொண்ட உயர்மட்ட 8 வழி சாலையாக இருக்கும். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 21 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலை, சுமார் ₹5,850 கோடி செலவில் கட்டப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்திற்கு சரக்குகள் தொடர்ந்து வருவதை உறுதி செய்யும்.

Next Story