Chandrayaan 3 success in tamil- முன்னாடியே சாதித்து இருக்கவேண்டும்..? ஏன் முடியவில்லை..? சிந்திக்கணும்..!

Chandrayaan 3 success in tamil- முன்னாடியே சாதித்து இருக்கவேண்டும்..? ஏன் முடியவில்லை..? சிந்திக்கணும்..!
X

chandrayaan-3-சந்திரயான் -3(கோப்பு படம்)

சந்திராயன்- 3 ன் வெற்றியை இந்தியா குறைந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருக்க வேண்டும். ஏன் பெறவில்லை? தெரிந்து தெளிவடையுங்கள்.

Chandrayaan 3 success in tamil,

நாசா முதல் கூகுள் வரை நம் இந்தியர்களின் பங்களிப்பு என்றும் ஆச்சர்யப்படும் வகையில் மேலோங்கி இருக்கிறது. அரசு பள்ளிகளில் படித்த சுந்தர்பிச்சை முதல் கால்டுவெல் வேள்நம்பி வரை அமெரிக்காவில் உச்சத்தை தொட்டுக் கொண்டு இருக்கும்போது இங்குள்ளவர்களால் ஏன் ஜொலிக்க முடியவில்லை? புதிதாக இந்தியாவில் ஏன் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை?

திரை மறைவில் என்ன நிகழ்கிறது இந்தியாவில்? ISRO, DRDO க்களில் அப்துல்கலாம் முதல் அண்ணாதுரை வரை மிகச்சிறந்த மூளைகள் இங்கு இருந்தும் ஏன் நாம் உலக நாடுகளோடு போட்டி போட முடியவில்லை? இந்தியாவில் ரூ.3000 -க்கு தயாரான ஒரு மிலிட்டரி ஷூ இருக்கும்போது இஸ்ரேலுக்குச் சென்று ரூ.26,000 க்கு ஏன் வாங்கப்பட்டது?

எங்கோ தவறு நடக்கிறதா? இல்லை எங்குமே தவறாக இருக்கிறதா?

இவையெல்லாம் ஊழல்களால் நடந்த மிகப்பெரிய துயரம். இதனை தற்போதைய மத்திய அரசு தடுத்துள்ளது. மோடி பிரதமராக வரும் வரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நம் நாட்டின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வைத்திருந்தன. இதைப்பற்றி விரிவாக எழுதினால் நிச்சயம் பல்வேறு சங்கடங்கள் உருவாகும்.

1962ல் இந்தியா Marut Fighter Jet ஐ 2 Mach வேகத்தில் செய்து முடித்து அது வெள்ளோட்டம் விடும் போது நம் போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. ஆனாலும் இந்தியா 147 விமானங்களை தயாரித்தது. அது பாகிஸ்தான் போரில், நூற்றுக்கணக்கான டாங்கிகளை நொறுக்கி மிகப்பெரிய சாதனை செய்தது. ஆனால் அப்பேர்பட்ட விமானம் இந்திய பாதுகாப்பு படையில் தொடர முடியாமல் 1985ல் அவை முற்றிலும் சேவையில் இருந்து நீக்கப்பட்டது.

Chandrayaan 3 success in tamil,

தேஜாஸ் என்று சொல்லப்படும் இலகு ரக Fighter Jets போன்ற தயாரிப்பு ஆராய்ச்சி இந்தியாவில் தொடங்கியது எப்போது? 20 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது ஏன் இவ்வளவு நாளாக அதை தயாரிக்க முடியாமல் இருந்தது? கடந்த 5 ஆண்டுகளில் அது விண்ணில் வெற்றிகரமாக பறந்தது மட்டுமல்ல, இந்தியாவின் சொந்த தயாரிப்பான அப்பாச்சி போன்ற ஹெலிக்காப்டர்களை வாங்க எப்படி இன்று உலக நாடுகள் ஆர்வம் காட்டுகிறது?

சீனாவின் J7 விமானத்தை வாங்க ஒப்பந்தம் போட்ட எகிப்து இரண்டு விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்கிய பின் அதன் தரமும், செயலும் மோசமாக இருக்கிறது என்று இந்தியாவின் தேஜாஸ் விமானங்களை வாங்க முன்வந்துள்ளது. தேஜாஸ் விமானத்தின் உயர்ந்த தரமே இதற்கு முக்கிய காரணம்.

மலேசியா, சீனாவின் அடுத்த லெவல் J16 Fighter Jet வாங்குவதை நிறுத்தி விட்டு நமது Tejas ஐ வாங்க முன்வந்துள்ளது. அப்படி என்றால் தரம் வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்வதில் பிரச்னை நம் அறிவைப் பற்றியது அல்ல? நம்மை இதுவரை ஆண்ட அரசுகள் பற்றியது.


ஆமாம் ஏற்கனவே நம்மிடம் அறிவு இருந்தது. ஆனால் அது பயன்படுத்தப்படவில்லை. இப்போது ஆட்சியில் நடந்த இந்த சாதனைகள் முந்தைய ஆட்சியிலும் செய்திருக்க முடியும். ஆனால் ஏன் முடியவில்லை? இதற்கு முன்பு ராஜீவ் காந்தி ஆட்சியின் போது மட்டும் இது போன்ற முயற்சிகளில் தீவிரமாக நாட்டுப்பற்றோடு இறங்கினார். ஆனால் அவரும் இல்லாமல் போனார்.

இந்தியாவை ஆண்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கத்திய நாடுகளிடம் விலைபோனார்கள். அதற்கு அரசாங்கம் அடங்க மறுத்தால் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மீடியா மூலம் ஊழல்கள் வெளிவரும். ராஜீவ்காந்திக்கு வந்ததை நாம் அறிவோம். நம் அரசியல்வாதிகள் இது போன்ற ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கலை முடிந்தவரை தடுக்க முனைந்தார்கள். அதற்குத் தேவையான உபகரபணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முட்டுக்கட்டைப் போட்டார்கள்.

அதையும் மீறி சில விஞ்ஞானிகள் தங்கள் பொறுப்பில் ஆராய்ச்சியை தொடர்ந்தால், அவர்களை பெண்களை வைத்துக்கூட மானபங்கப்படுத்தி (கேரள விஞ்ஞானி) மடக்கினார்கள். அவர்களை மேற்கத்திய கைக்கூலிகளுக்கு விலைபோன மீடியா மூலம் அவர்கள் செயலைக் கெடுத்து இங்கே நடக்கும் அரசுகள் மூலம் அவர்களை சிறையில் கூட அடைத்தார்கள். அப்படி இருக்கும் போது யார் இதையெல்லாம் தாண்டி நாட்டுக்காக வேலை பார்ப்பார்கள்?

Chandrayaan 3 success in tamil,

விளைவு, அவர்கள் வாங்கிய சம்பளத்துக்கு ஏதோ பேருக்கு சிலவற்றை செய்து விட்டு சம்பளம் வாங்கி வாழ்க்கையை ஓட்டினார்கள். திறமை மிக்க சிலர் தம் திறமை வீணாவதை சகிக்த்துக்கொள்ள முடியாமல் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, நாசா போன்ற அமைப்புகளில் சேர்ந்து தங்கள் திறமையை நிரூபித்தும் காண்பித்தார்கள்.

இவர்களை எல்லாம் கடந்து அப்துல் கலாம் போன்ற வெகு சிலரே, உலகளாவிய ஆயுத கும்பலின் லாபியை சமாளித்து தங்கள் திறமை மூலம் விஞ்ஞானிகளை காத்து உதவி சாதனை படைத்தார்கள். இப்போது புரிகிறதா ஏன் அறிவில் சிறந்த நம் விஞ்ஞானிகளால் அறிவும், திறமையும் இருந்தும் சாதிக்க முடியவில்லை என்று.

ஆம் நம் நாட்டில் நடக்கும் ஒவொரு விஷயங்களும் வல்லரசுகளால் கவனிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டது. இது ஒன்றும் ஆயுத தளவாடங்கள் தயாரிப்பதற்கு மட்டுமல்ல, தடுப்பூசி தயாரிப்பதற்கு கூட அவர்கள் கட்டுப்பாடு விதித்தார்கள். இந்திய நாட்டிற்கு சரியான தலைமை வந்த பின் கிடைத்த மாற்றமே தேஜாஸின் வெற்றி முதல் கோவேக்ஸின் தடுப்பூசி வரை நம்மால் சாதிக்க முடிந்தது. ஏதோ அதை செய்வது ஒன்றும் சாதாரணம் அல்ல.


அதற்கு உலக மருந்து மாஃபியாக்களின் கட்டுப்பாடுகளை மீறி இந்த அரசு எப்படி சாதனை படைத்துள்ளது என்பதைக்கூட நம்மில் பலர் புரிந்து கொள்ளவில்லை என்பது மிக வேதனையான விஷயம். அது மட்டுமல்ல. இந்தியாவில் மிகவும் நன்றாக படிக்கும் மாணவர்களை அமெரிக்கா முதல் ஜெர்மனி வரை படிக்க உதவித் தொகை கொடுத்து அவர்களை வேலைக்கு எடுத்து கண்டுபிடிப்புகளை மேன்மேலும் புதிது புதிதாக செய்கிறார்கள்.நமது தேசத்துக்கு பயன்படுத்தப்படவேண்டிய இந்திய மூளை பிற நாடுகளின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Chandrayaan 3 success in tamil,

ஆனால் இங்கோ அந்த அறிவுள்ளவர்களை இழந்து (Brain drain) அறிவில்லாத அதிகாரிகளின் கீழ் அடிமையாக வேலை செய்யும் நிலையை உருவாக்குகிறார்கள். அப்படியெனில் நாம் எப்படி முன்னேறுவோம்? இது போன்ற நிலையெல்லாம் இப்போது மாறி விட்டது என்பதற்கு மிகச்சிறந்த அத்தாட்சி தான் தேஜாசும், சந்திராயனும்.

நம்மை அடிமைப்படுத்தி ஆண்டவன் வரலாறு வேண்டாம். சாதனை செய்த நம் வீர வரலாற்றைப் படிக்க குழந்தைகளை ஊக்குவியுங்கள். சந்திரனை காட்டி உணவூட்டும் போது சந்திராயனைக் காட்டி ஊக்குவியுங்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!