166 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல் முறை
இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா
உலகிலேயே மிகப்பெரியது இந்திய ரயில்வே. இந்தியாவில் அதிக பணியாளர்கள் பணிபுரியும் துறையாகவும் இந்திய ரயில்வே விளங்கி வருகிறது. இந்திய ரயில்களில் தினமும் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை மட்டும் பல சிறிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பது வியப்புக்குரிய செய்தி. தினமும் குறைந்தது 5 கோடி பயணிகளை இந்திய ரயில்வே கையாள்கிறது. 16 லட்சத்திற்கும் அதிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவ்வளவு பெரிய உலகின் மிகப்பெரிய அரசுத்துறையாக இந்திய ரயில்வே சிறப்புகளை பெற்றுள்ளது.
இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா செப். 1ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் 166 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்திய ரயில்வே வாரியத்துக்கு தலைமையேற்ற முதல் பெண் என்ற பெருமையை ஜெயா வர்மா பெற்றார்.
ரயில்வே வாரிய உறுப்பினராக உள்ள ஜெயா வர்மா சின்ஹாவை வாரியத்தின் தலைமை பொறுப்புக்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து (செப்.1ல்) ஜெயா வர்மா ரயில்வே வாரியத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் இருப்பார் என ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu