சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு
X

சி.பி.எஸ்.சி லோகோ.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அத்துடன், பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் முறையையும் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை வேகமாக பரவியதால் மாணவர்களின் நலன் கருத்திற்கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி:

1. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 பாடங்களில் மாணவர் பெற்ற மதிப்பெண்களில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.

2. பிளஸ் 1 வகுப்பு பாடங்களில் 30 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும்,

3.பிளஸ் 2 வகுப்பு பாடங்களில் 40 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும்,

4. பிளஸ் 2-வில் யூனிட் தேர்வுகள், பருவத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

5. செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்று விளக்கம் விளக்கமளித்துள்ள சிபிஎஸ்இ, பிளஸ் 2 ரிசல்ட் வருகின்ற ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!