/* */

மணிப்பூர் சம்பவத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

HIGHLIGHTS

மணிப்பூர் சம்பவத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
X

மணிப்பூரில் குக்கி – மெய்தி பழங்குடியின சமூத்தினர் இடையே இருந்து வந்த மோதல்கள் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். வன்முறை உச்சத்தில் இருந்த போது, Kangpokpi மாவட்டத்தில் மே 4ம் தேதி குக்கி பழங்குடியின இளம் பெண்கள் இருவரை வன்முறை கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் செல்லும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான புகாரை விசாரித்த மணிப்பூர் காவல்துறை ஜூலை 20ம் தேதி 4 பேரை கைது செய்தது. ஜூலை 22ம் தேதி அன்று சிறுவன் ஒருவன் பிடிபட்டான். 6வது குற்றவாளி ஜூலை 23ம் தேதியும் 7வது குற்றவாளி ஜூலை 24 அன்றும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மணிப்பூர் காவல்துறைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. 27 வழக்குகளில் சுமார் இரண்டரை மாதம் தீவிரமாக விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று கவுகாத்தியில் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகையில் 6 பேர் மீது கூட்டு வன்புணர்வு, கலவரம், கொலை, கடத்தல், குற்றச்சதி ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதிராக உரிய ஆதாரங்களுடன் சிறார் நீதி வாரியத்தில் தனி அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 18 Oct 2023 9:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்