ஜூன் 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

ஜூன் 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
X

உச்ச நீதிமன்றம் (மாதிரி படம்) 

காவேரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் 22ம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில் கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம், புதுவை, கேரளம் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!