உலகளாவிய வர்த்தகத்தை கைப்பற்ற இந்தியாவில் மிகப்பெரிய நிதிஅமைப்பு..!

உலகளாவிய வர்த்தகத்தை கைப்பற்ற  இந்தியாவில் மிகப்பெரிய நிதிஅமைப்பு..!
X

பிரிக்ஸ் நாடுகள் 

உலகளாவிய வர்த்தகத்தை கைப்பற்றி இந்தியாவில் மிகப்பெரிய நிதி அமைப்பு அமையவிருக்கிறது.

பிரிக்ஸ் மாநாட்டை முடித்து விட்டு மோடி தாயகம் திரும்பிய நிலையில் அவர் செய்திருக்கும் பல நகர்வுகள் ஒவ்வொன்றாய் வெளிவருகின்றன.

உலகம் அதனை அமைதியாய் கவனிக்கின்றது. பிரிக்ஸ் என்றொரு அமைப்பை நிறுவ ஒரே காரணம் சீனா. துணை காரணம் ரஷ்யா. 1990க்கு பின்னரான பொருளாதார தளர்வுகள், உலகமயமாக்கல் என சீனாவுக்கு சாதகமான காலங்கள் வந்தன.

இக்காலகட்டத்தி இந்தியா அரசியல் ஸ்திரத்தன்மையினை இழந்திருந்தது, இங்கே ஆட்சிக்கு ஆளாளுக்கு சண்டையிட சீனா பெரும் பாய்ச்சல் காட்டியது. அப்போது இருந்தே அவர்களுக்கு ஒரு கனவு இருந்தது அது, உலக வங்கி எனும் வங்கி போல சீனாவின் வங்கி உலகை ஆளவேண்டும் என்பது சீனாவின் இந்த கனவு.

இதற்கு தொடக்கம் தான் 2009ல் இந்த பிரிக்ஸ் அமைப்பு தொடங்கபட்டது. இந்த அமைப்பின் இருந்த சீன தந்திரம் மகத்தானது. அது உலகவங்கிக்கு ஈடாக தான் ஒரு வங்கி வைத்து ஆசியாவினை முதலிலும் உலகை இரண்டாவதுமாக கட்டுபடுத்துவது.

இதனால் பெரும் செலவில் ஷாங்காயில் ஒரு வங்கி அமைத்தார்கள். பெரிய முதலீட்டை செய்தார்கள். வெளியே ஒரு அமைப்பு என சொல்லி பல நாடுகளுக்கு கடன் கொடுத்து மெல்ல மெல்ல அடிமைப்படுத்த முயன்றார்கள். 2009ல் இந்த அமைப்பில் மன்மோகன்சிங் இந்தியாவினை சேர்த்தார், சீன ஆதிக்கம் கொண்ட அமைப்பில் இந்தியாவினை காங்கிரஸ் அமைப்பு ஏன் சேர்த்தது என்றால் அதுதான் காங்கிரஸ். இப்போது இந்த பிரச்னை பற்றி பேச வேண்டாம். விஷயத்திற்கு வருவோம். 2014 வரை சீனா இங்கே அட்டகாசம் செய்தது,

புடீனுக்கு கிரிமியாவினை ஆக்கிரமிக்கும் தைரியம் இங்கிருந்து தான் தொடங்கிற்று. இனி நமக்கென ஒரு பலமான அமைப்பு உண்டு, சீன வங்கி உண்டு என்றெல்லாம் அவரின் கணக்குகள் இருந்தன. போர் வந்தாலும் பணம் பதுக்க ஒரு நாடு உண்டு என கணக்கிட்டார் புடின்.

சீனா பெரும் பெரும் கனவில் இறங்கியது. உலகுக்கே இனி சாலை, ரயில், கப்பல் என பெரிதாக அடியெடுத்து வைத்தார்கள். இனி நாங்களே அமெரிக்காவுக்கு மாற்று எனும் வகையில் சீனாவின் அட்டகாசம் இருந்தது. காங்கிரஸ் வழக்கம் போல் தன் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழலில் கவனமாய் இருந்தது

இந்த அமைப்பில் சீனா தன் தென் அமெரிக்க பிடியான பிரேசிலையும் சேர்த்து கொண்டது. தென்னாப்ரிக்காவும் வந்தது. ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவில் தன் பிடியினை இறுக்க வேண்டும் என்பது தான் சீனாவின் திட்டம். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது புடீனின் கணக்கு.

2014 வரை இந்தியா ரஷ்யாவின் தலையாட்டி பொம்மை. அடிமை என்று கூட சொல்லலாம். சீனாவும் ரஷ்யாவும் வாழட்டும். இந்தியா எப்படியும் போகட்டும் என்பதெல்லாம் 2014க்கு முன்புவரை சரியாக இருந்தது.

சோனியாவுக்கு மன்மோகனார் எவ்வளவு விசுவாசமோ அதே விசுவாசத்துடன் இந்த அமைப்புக்கும் இருந்தார். 2014ல் மோடி வந்தபின் காட்சிகள் மாறின. மோடி இந்த அமைப்பில் சீன பிடியினை மெல்ல மெல்ல தளர்த்தினார். அதுவரை அந்த அமைப்பினை நம்ப பல நாடுகள் தயாராக இல்லை. சீனாவின் திட்டம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

மோடி அட்டகாசமாக காய் நகர்த்தினார். ஒரு அமைப்பில் ஒரு நாட்டின் ஆதிக்கம் ஒழிய பல நாடுகள் அவசியம். அவை பெரும் எண்ணிக்கையில் இருத்தல் அவசியம் எனும் பாலபாடத்தை கையில் எடுத்தார் .நிச்சயம் பிரிக்ஸ் போன்ற அமைப்பு அவசியம். குறிப்பாக இந்தியாவின் பல நலன்களுக்கும் முழுக்க அமெரிக்க பிடியில் சிக்காமல் தேசம் பலமாக நிற்கவும் அவசியம். அதே நேரம் சீன ஆதிக்கத்தையும் ஏற்க முடியாது.

மோடி இந்தியாவினை சீனாவின் ராணுவ மிரட்டலுக்கு எதிரான அமெரிக்காவின் குவாட் அமைப்பில் சேர்த்தார். அதாவது ராணுவ ரீதியாக சீனா எதிரி என அறிவித்தார். அதே நேரம் பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா சீனாவோடு உண்டு பொருளாதார் ரீதியாக சீனாவோடு உறவு என அறிவித்தார்.

அதன் பின் செய்தது தான் ராஜதந்திரம். பிரிக்ஸ் அமைப்பை பெரிதாக்கி சீனாவுக்கு கடிவாளம் போட தீர்மானித்தார். பல நாடுகள் வர சம்மதித்தன. இந்த அமைப்பில் இந்திய கரம் ஓங்குவதையும், தன் நெடுங்கால திட்டம் சரிவதையும் என்ணித்தான் மோடிக்கு சீனா நெருக்கடி கொடுத்தது கால்வான் தாக்குதல், உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள், ராகுலாரின் குபீர் சீன எல்லை கவலை எல்லாம் அப்படி வந்தது.

மோடியின் அழகான நகர்வால் எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அமிரகம் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் பக்கம் வந்தன. ஈரானும் வந்து ஒட்டிகொண்டது. ஈரானும் ரஷ்யாவும் மிக, மிக நெருக்கமான நாடுகள். இங்கே எகிப்து ரஷ்யாவின் முன்னாள் நட்பு நாடு. சவுதியும், அமீரகமும் அமெரிக்காவின் பங்காளிகள். ஆனால் ரஷ்யாவோடு பொருளாதார உறவு என மோடி பாணியிலே அவர் பின்னால் வந்தன. எத்தியோப்பியாவும் மோடி வழியில் வந்தது.

இப்படி இந்திய பிடி அதிகரிக்க துருக்கியினை சீனா உள்ளே இழுக்கின்றது. பதிலுக்கு அல்ஜீரியா, கிழக்காசிய நாடுகள் தாய்லாந்து என இந்தியாவின் நகர்வுகள் இருக்கின்றன. வெளியே அது அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார அமைப்பு என்பது போல் தெரிந்தாலும் உள்ளே பலவிஷயம் உண்டு.

இங்கே யாரும் ஆங்கிலம் பேசமாட்டார்கள், அவரவர் சொந்த மொழியில் பேசுவார்கள். அவரவர் கலாசாரததை காக்கும் சில முக்கிய அம்சமும் உண்டு. மோடி இந்தியில்தான் பேசினார், புட்டீன் ரஷ்ய மொழியில் பேசினார், ஜி ஜின்பிங் மாண்டரினில் தான் பேசினார், அவரவர் மொழி கலாசாரத்தை விடுவதில்லை. அப்படி அவரவர் நாணய பரிவர்த்தனை என பல உண்டு. இப்படி ஒரு சில அம்சமும் கொண்ட அமைப்பு இது. இப்போது நடப்பது பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கமும் அதில் யார் அதிகாரம் என்பதுமே. இங்கே மோடி செய்திருப்பது மிகபெரிய ஆட்டம்.

தனிகாட்டு ராஜாவாக ஆடிகொண்டிருந்த சீனாவுக்கு கடிவாளமிட்டு இங்கு இந்திய நலனும் முக்கியம், நாங்களும் உங்களுக்கு வலுவானர்கள் இந்திய நலனை விட்டு கொடுக்க முடியாது எனும் ஆட்டத்தை தெளிவாக ஆடியுள்ளார். இங்கே இந்தியா தன் நட்பு நாடுகளோடு களம் இறங்கி நிற்கின்றது. மோடியின் சாதுர்யமனா போக்கு எதை நோக்கி செல்கின்றது என்றால் இதுதான்.

உலகவங்கி என ஒன்று மேற்குலகுக்கு வலுவாக அமெரிக்காவில் இருப்பது போல, "பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி" சீனாவில் இருப்பது போல, இந்தியாவில் ஒரு வலுவான வங்கியினை சர்வதேச நாடுகளின் நிதிநிலைக்காக மோடி அமைக்கவிருக்கின்றார்.

விரைவில் பிரிக்ஸ் நாடுகளின் இன்னொரு வங்கி இந்தியாவில் வரலாம். அல்லது கொஞ்ச காலத்தில் இந்தியாவே ஒரு அமைப்பை தொடங்கி இந்தியாவில் வலுவான ஒரு நிதிநிலை வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கலாம்.

ஆக உலகின் மூன்றாம் வலுவான பொருளாதார தேசம் இந்தியா. இனி உலக நிதிவிவகாரங்களிலும் இந்தியா தவிர்க்க முடியாதது என நிரூபித்து கொண்டிருக்கின்றார் மோடி. சீன அடிமையாக எந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா பொம்மையாக வைக்கப்பட்டதோ, அந்த அமைப்பில் அடித்து ஆடி இந்தியா இல்லமால் இனி எதுவுமில்லை என காட்டிகொண்டிருக்கின்றார் மோடி.

இப்படியெல்லாம் ஒரு தலைவன் கிடைக்கவும், இவ்வளவு தைரியமாக முடிவெடுக்கவும் தேசத்தின் முன்னோர் செய்த தவமே காரணம் என்பதன்றியும், இது மாபெரும் சக்தியால் வழிநடத்தபடும் நாடு என்பதன்றியும் தவிர் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

மோடியின் சாதுர்யத்தில் சீனாவினை ராணுவரீதியா எதிர்க்க குவாட் அமைப்பு, பொருளாதார் ரீதியாக சீனாவினை சமாளிக்க பிரிக்ஸ் அமைப்பு என சாதுர்யமாக நகர்ந்து இனி உலகின் மூன்றாம் பலமான நாடு, ராணுவம் பொருளாதாரம் என பலமான நாடு பாரதம் என நிறுத்தியிருக்கின்றார் மோடி.

அதுதான் நாட்டைத்தவிர ஏதும் நினைக்காத பெரும் நாட்டுபற்றும் அர்ப்பணிப்பும் அமெரிக்காவின் "உலக நிதியகம்" சீனாவின் "பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி" என இரு மகா சக்திகளுக்கு இணையாக இந்தியாவில் ஒரு பெரிய நிதியமைப்பு உருவாக்க பாடுபடும் மோடியின் கனவு விரைவில் நடகக் பிரார்த்திப்போம்.

"உலகமே இந்தியாவுக்கு, இந்தியா உலகுக்கு" என பெரும் பாய்ச்சல் காட்டும் பிரதமர் மோடியால் உலகில் உயர பறக்கின்றது பாரதக்கொடி.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்