பிரசாந்த் கிஷோரால், மோடியை பிரதமர் பதவியில் இருந்து கீழே இறக்க முடியுமா?

பிரசாந்த் கிஷோரால், மோடியை பிரதமர் பதவியில் இருந்து கீழே இறக்க முடியுமா?
X

பிரசாந்த் கிஷோர், பிரதமர் மோடி.

பிரசாந்த் கிஷோரின் உத்திகள் மட்டுமே அவர் ஆதரிக்கும் நபரை வெற்றி பெற செய்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

பிரசாந்த் கிஷோர், ஒரு நல்ல வியூகவாதி என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், தேர்தல்களில் அவர் ஆதரிப்பவரின் வெற்றிகள் அனைத்தும் அவரது உத்திகளால் மட்டுமே வெற்றி பெறுகின்றனரா என்றால், இல்லை என்பதே சரியாகும். காரணம் அவர் ஆதரிப்பவரின் பிரபலத்தால் மட்டுமே அது சாத்தியமானது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

2014ம் ஆண்டில் மோடி, ஆந்திராவில் ஜெகன், டெல்லியில் கெஜ்ரிவால், பீகாரில் நிதிஷ்,தமிழகத்தில் ஸ்டாலின் என இப்படி நாடு முழுதும் அவர் ஆதரித்து வியூகம் அமைத்துக் கொடுத்தவர்கள் பலரும் அறியப்பட்ட பிரபலங்கள். அதனால் அவர்களுக்கான பிம்பத்தை அவரால் உருவாக்குவது எளிதான காரியமே. அதாவது நன்றாக படிக்கும் மாணவனை கூடுதல் மதிப்பெண் பெற வைப்பதைப் போன்றது, பிரசாந்த் கிஷோரின் உத்திகள்.

அறவே படிக்காத மாணவனை மாநில அளவில் முதல் மாணவனாக தயார்படுத்தினால் அவர் நிச்சயமாக சிறந்த ஆசிரியராகத்தானே இருக்க முடியும்?! 2017 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை வெற்றிபெறச் செய்ய அவரால் முடியவில்லை. ஒருவேளை அவர் தலையிட்டதால்தான் உ.பி.யில் இருந்து காங்கிரஸ் காணாமல் போய்விட்டதோ, என்னவோ? அப்போது காங்கிரஸ் வெறும் 7% வாக்குகள் பெற்று 6 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே பெற்றது.

அப்படி என்றால், பிரசாந்த் கிஷோர் 2024ம் ஆண்டில் மோடியை வீழ்த்த, அவரைப்போன்ற பிரபலம் உள்ள ஒருவரை அடையாளம் காண வேண்டும். அப்போதுதான் அவரது உத்திகள் பலனளிக்கும். முகம் தெரியாத எந்த ஒரு நபரையும் தேசிய அரசியல் பதவிகளுக்கு முன்னிறுத்த முடியாது. மோடியைப்போன்ற திறனுடைய ஒருவரை எதிர்க்கட்சிகள் இன்று வரை அடையாளம் காணவில்லை. அப்படி எவரும் அறியப்பட்ட தலைவராக இப்போதுவரை இல்லை என்பதே உண்மை.

மத ரீதியிலான சில தாக்கங்களை பா.ஜ.க பெற்றிருப்பது உண்மை எனினும் அந்த காட்சிகளை பிரசாந்த் கிஷோர் தனக்கு சாதகமாக மாற்றுவது கடினம். மோடிக்கு எதிராக அவர் இறங்கினால் அதிகபட்சமாக சில இடங்கள் அல்லது சில சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடியும். மோடிக்கு எதிராக வெற்றி பெற புதிய அரசியல் கட்சியையோ அல்லது ஒரு புதிய குழுவையோ முன்னிறுத்தி மோடியின் வெற்றிக்கு நிச்சயமாக முட்டுக்கட்டை போட முடியாது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!