அதானி, அம்பானி ஏன் தாக்கப்படுகிறார்கள்..?

அதானி, அம்பானி ஏன் தாக்கப்படுகிறார்கள்..?
X

முகேஷ் அம்பானி, கவுதம் அதானி 

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வாழ்த்து சொல்லும் போது, இந்தியா கண்டிப்பாக வல்லரசாக முடியும் என்ற நம்பிக்கை எழுந்தது.

இந்தியா வல்லரசாகும் என்ற கனவு சாத்தியமாகாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கான காரணத்தையும், தீர்வுகளையும் தேடாமல் போனால் அது பகல் கனவு ஆகிவிடும். இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான்.

ஒரு நாடு வல்லரசாக வேண்டுமென்றால், அதை மாற்று வழியில் ஒரு தனி நபர் பணக்காரனாவது எப்படி என்ற கேள்விக்கு பதிலை தேடினால் கிடைக்கும் பதில் இதற்கு உகந்ததாகவே இருக்கும்.

ஒருவர் பணக்காரனாக அவருக்கு ஒரு நல்ல தொழில், தொழிலாளர்கள், சார்பான அரசாங்கம் தேவை. அவரது போட்டி தொழில் செய்பவர்களுக்கு மேற்சொன்னவை கிடைக்கக்கூடாது. தொழிலில் நீதி, நேர்மை, என்பது தேவையில்லாத எக்ஸ்ட்ரா லக்கேஜ்.

தவறான வழிகளில் சட்டத்தை மீறி சாதகம் செய்யவும், தன் போட்டி தொழில் செய்பவர்களுக்கு பாதகத்தை செய்யவும், அனைவருக்கும் ஒரு பொதுவான அரசால் செய்ய முடியாத போது அதைச்செய்ய ஒரு வலுவான, விசுவாசமான, நீதி, நேர்மை எல்லாம் இல்லாத ஒரு ரவுடிகள் போன்றதொரு பலம் தேவை.

இது எல்லாம் வல்லரசாக இருந்த நாடுகளிடம் இருந்தது. அதை அதிகம் வைத்திருந்ததால் பிரிட்டிஷ், அமெரிக்காவால் நீண்டகாலம் வல்லரசாக இருக்க முடிந்தது. அது இல்லாததால் அன்றைய வெறும் ஆசையும், சுயநலம் மட்டுமே கொண்டிருந்தால் சோவியத் யூனியன் முதல் இன்றைய சீனா வரையிலும், நாளை பொது நலம் விரும்பும் இந்தியாவாலும் வல்லரசு ஆக முடியாது என்பது எதார்த்தமானது.

அமெரிக்காவின் அப்படிப்பட்ட ஆயுதங்கள் என்னென்ன?

அமெரிக்காவிடம் இருந்த டாலர் (பொருளாதார) மற்றும் ஆயுத பலத்தால் தொழில்களை தன்னிடம் வைத்திருக்கவும், அதன் மூலப்பொருட்களையும், தொழில் நுட்பத்தையும் தன்னிடமே வைத்திருப்பதன் மூலமும் மற்றவர்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொண்டது. முக்கியமாக அது கச்சா எண்ணெயை அதன் முழு கட்டுப்பாட்டில் 50 ஆண்டுகள் வைத்திருந்து.

அதை மீறி வளரும் தொழில்களை தனது ராணுவத்தையும், CIA போன்ற நிழல் அரசுகளால் உருவாக்கப்பட்ட மற்ற நாடுகளுக்கு எதிரான போராளிகளையும், ஐ.நா., சபையையும் வைத்து பெரியளவில் அநீதிகளாலும், அராஜகத்தாலும் செய்ய முடிந்தது. அதை தாண்டி வளரும் தொழில் நிறுவனங்களை தனது நாட்டின் அரசு ஆதரவு நிறுவனங்களால் வாங்கவும், அல்லது அழிக்கவும் அதனால் முடிந்தது.

அதற்கு ராணுவமும், மதமும், மீடியாவும், CIA போன்ற நிழல் அரசுகள் மட்டுமல்ல, அதற்கு இணையாக அதை செய்தது அமெரிக்க நாட்டின் தொழில் நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகித்தது. அதில் கோக், பெப்சி, முதல் ஃபோர்ட், ஜெனரல், மைக்ரோ சாஃப்ட், ஐபிஎம், கூகுள் முதல் இன்று டெஸ்லா வரை அதன் ஆதிக்கம் எப்படிப்பட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவிற்கு டாடா, பிர்லா, மஹிந்ரா, TVS போன்ற அமைப்புகள் நேர்வழியில் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய போது, அம்பானி, அதானி குழுக்கள் அமெரிக்காவின் பெப்சி, கோக் போல இந்தியாவிற்கு பெரியளவில் உதவி இருக்கிறது. அதில் அம்பானிகள் தங்கள் பங்கீட்டை உள்நாட்டில் செய்தபோது, வெளி நாட்டில் செய்ததற்கு உதவிய அமைப்பு அதானி குழுமம் என்பது இன்னும் பலருக்கு புரியவில்லை.

ஏன் மீடியாக்களால் அதிகம் அதானியும், அம்பானியும் முன் வைக்கப்படுகிறார்கள். மோடி அரசு அதானி குழுமத்திற்கு உதவுகிறதா? காங்கிரஸ் உதவ வில்லையா? ஏன் டாடா, மஹிந்திரா எல்லாம் இதில் அதிகம் சிக்குவதில்லை?

ஒரு நாட்டின் ஆதிக்கம் என்பது மற்ற நாடுகளின் மீது பல வகையில் இருக்கும். அதற்கு வெறும் ஆயுதங்கள் மட்டுமல்ல, அது வித விதமானது. அதை அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் பல புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி உலகை ஆண்டு வருகிறது. அதில் கிறிஸ்தவ அமைப்புகள், மீடியா, NGO என்று எல்லாம் அதன் பணத்தின் மீது கட்டப்படும் போலியான பிம்பங்கள்.

அப்படிப்பட்ட விதத்தின் இன்னொரு முக்கியமான, பலருக்கும் தெரியாத விஷயம் தொழிலதிபர்கள். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், மற்ற நாடுகளை வளரவிடக்கூடாது. அதன் மூலம் வளர்ந்த நாடுகள் ஆதாயம் அடையும். உதாரணமாக உபியில் அரசு சிறப்பாக செயல்பட்டால், தமிழ்நாட்டில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள் என்பதால், அங்கே மோசமான அரசுகள் தான் இருக்க வேண்டும் என்று தமிழகம் விரும்பினால் எப்படி இருக்கும்?

அதைத்தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எல்லா விதத்திலும் ஏழை நாடுகளை ஏழையாகவே வைத்திருக்க விரும்பி செய்கிறது. அதை நேரடியாக செய்ய முடியாது. அப்போது அந்த நாட்டில் உள்ள சில தொழில் அதிபர்களை வைத்து அதை செய்வார்கள்.

உதாரணமாக கோக், பெப்ஸி எல்லாம் அந்த வகையில் அமெரிக்க அரசின் ஆதிக்கம் நிறைந்தவை. அந்த கோக் நிறுவனத்திற்கு இந்தியாவில் ஜனதா கட்சியால் அனுமதி மறுக்கப்பட்டதால் மொராஜி தேசாய் அரசு கலைக்கப்பட்டது. லால்பகதூர் சாஸ்திரிக்கு செவி சாய்க்க மறுத்த போது விஷம் வைத்து கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இலங்கை கப்பற்படை தளம் அமைக்க உதவ மறுத்த ராஜீவ்காந்தி அமெரிக்காவால் கொல்லப்பட்டார், என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அது பல நேரங்களில் நாட்டின் ஆதிக்கத்தை விஸ்தரிக்க பயன்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்திக்கொண்டு அந்த நிறுவனங்கள் சில நேரங்களில் அரசின் சலுகைகளையும், தவறுகளையும் கூட செய்வதற்கு பயன்படுத்தும். அது இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது.

உதாரணமாக உலகம் முழுவதும் சீனாவின் ஆதிக்கம் நிலக்கரி சுரங்களை கைக்குள் கொண்டு வந்தது. எல்லா சுரங்கமும் சீனாவில் கைக்குள் போனால், அதில் Monopoly ஆகி அது சொல்வது தான் நிலக்கரியின் விலை என்பதாகி விடும். அது எதிர்காலத்தில் நாட்டுக்கு பெரிய ஆபத்து என்பதை உணர்ந்த இந்திய அரசின் யுக்திகளை வகுக்கும் உளவு நிறுவனங்கள் அதை அரசுக்கு ஆலோசனை சொல்லும்.

அப்படி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டபோது, நமது அரசாங்கத்தை RAW போன்ற நிறுவனங்கள் இந்திய அரசை எச்சரித்தது. ஆனால் அது போன்ற சூழலில் நமது அரசின் நிலக்கரி நிறுவனம் அதை சரியாக செய்ய முடியாது என்பதால் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களை அதில் கலந்து கொள்ள வற்புறுத்தியது. அதன் விளைவாக காங்கிரஸ் ஆட்சியின் போது 2010 ஆண்டு அதானி நிறுவனம் அதில் பங்குபெற்று ஏலத்தை எடுத்தது.

அது போன்ற சூழலில், சீனா அந்த போட்டியை அனுமதிக்காது. அதற்காக அது மிக அதிக விலை கொடுத்து வாங்கி தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி செய்யும். அப்போது அதற்கு போட்டியாக இருந்த அதானி போன்ற நிறுவனங்கள் அதையும் மீறி போட்டி போட்டு வெல்ல வேண்டும். அது போன்ற சூழலில் அதில் லாபம் குறைவாகவோ, ஏன் அந்த தொழிலில் நஷ்டம் கூட ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

எனவே, அப்படி இந்திய அரசுக்கு உதவ அந்த நிறுவனங்கள் முன் வரும் போது, ஏற்படும் இழப்பை சரிகட்ட வேறு விதங்களில் அரசு அந்த நிறுவனங்களுக்கு உதவும். உதாரணமாக பட்ஜெட்டில் அவர்கள் கோரிக்கைகள் செவி சாய்க்கப்படும். அந்த வகையில் அம்பானி, அதானி நிறுவனங்கள் அரசுக்கு உதவுவதன் மூலம் Win-Win என்று அதை ஆதாயமாக்கி கொண்டது.

அதனால் அது போன்ற விஷயங்கள் அமெரிக்கா, சீனாவின் அரசுக்கு தெரியவரும். அதை அவர்கள் நம் நாட்டில் இருக்கும் மீடியா, மற்றும் தேசவிரோத கைக்கூலிகளை வைத்து ப்ரொபகெண்டா செய்து அரசுக்கு சங்கடம் விளைவிப்பார்கள். அந்த வகை சங்கடமே அதானிக்கு சமீபத்தில் தொடர்ந்து வந்த நெருக்கடிகள். அதன் மூலம் அதானி நிறுவனத்திற்கும், அரசுக்கும் நெருக்கடி கொடுத்து அதை வீழ்த்துவதே அவர்களின் நோக்கம். அதே நெருக்கடி அம்பானிகளுக்கு வரவில்லை என்பதையும் கவனிக்க.

இது காங்கிரஸ் அல்லது பாஜக அரசால் செய்யப்பட்டாலும், நம் அரசாங்கத்தின் யுக்திகளை வைக்கும் Strategic Agencies தான் இதை முன்வைக்கும், சில நேரங்களில் தங்களிடம் இருக்கும் ரகசிய விபரங்களை இந்த நிறுவனங்களுக்கு கொடுத்துக்கூட உதவுவது உண்டு. அதன் மூலம் அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி போன்ற வகைகளில் ஆதாயம் அடைவது உண்டு. நம் நாட்டில் அது போன்ற நிறுவனங்களின் ஆதிக்கம் இன்னும் குறைவு. இந்தியா வல்லராக உயரும் போது இது போன்ற நிறுவனங்களும் எண்ணிக்கை உயரும்.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில். அந்த நிறுவனங்கள் எந்த எல்லைக்கும் செல்லும். உதாரணமாக Water Gate ஊழலை வைத்து Richard Nixon ஐ திட்டமிட்டு தோற்கடித்தது. John F Kennedy ஐ கொன்றது CIA என்பது உலகில் பலருக்கு தெரிந்த ரகசியம். ஏன் சமீபத்தில். அதற்கு கட்டுப்படாத Ronald Trump தோற்கடிக்கப்பட்டது கூட அந்த பலம் வாய்ந்த நிறுவனங்களால் தான்.

அதற்கு தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி என்பவர் கிட்டத்தட்ட அந்த சக்திகளால முற்றிலும் இயக்கப்படும் அமெரிக்காவின் தலையாட்டி பொம்மை மற்றுமொரு மன்மோஹன் சிங் தான்.

இதற்கு மீடியாக்கள் பெரியளவில் துணை போவதால், அது போன்ற நிறுவனங்கள், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் ஏஜெண்டுகள், NGO க்கள் எனும் போர்வையில் ஒளிந்திருக்கும் Ford Charities என்று அதன் எல்லை எல்லை அறியாது. சமீபத்தில் கிளின்டன் இந்தியாவில் ஒரு பெரும் நிதி உதவி செய்தது செய்தியில் வந்தது நினைவிருக்கும்.

இது போன்ற சூழலில் அந்த முதலீடுகளை சரிகட்டும் வகையில் தவறுகளை செய்ய வேண்டி வரலாம். அதனால் டாடா, மஹிந்திரா, போன்ற நிறுவனங்கள் அதை செய்ய முன்வராது. ஆனால அதானி, அம்பானி அதை செய்வதால் அரசின் சாதகங்களை அது பெறுகிறது. இது போன்று முதலீடுகளில் அம்பானி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட மிக முக்கிய துறைமுக தொழிகளில் முதலீட்டை செய்தபோது, Business Diversification என்பதை அதிகம் செய்தது அதானி குழுமம். அதனால் அரசின் ஆதரவை எளிதாக பெற்றது. அதன் மூலம் உலகெங்கும் அது வேகமாகவும் வளர்கிறது.

இன்று கொதிக்கும் காங்கிரஸ், நேற்றைய ஆட்சியிலும், ஒரு வேளை நாளை ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் செய்யும், அதில் தவறில்லை. ஆனால் அதை நாட்டின. நலன் கருதி புரிந்து கொண்ட பாஜக அதை அரசியலாக்கி கடந்த காலத்தில் பெரிது படுத்தியதில்லை. காங்கிரஸ் அது போன்ற விஷயங்களில் தார்மீக நடைமுறை மீறி யுகங்கள் கடந்து விட்டது.

இதன் விளைவாக அந்த பெரிய நிறுவனங்களின் தேர்தல் நிதி குறையும்போது அதை சரிகட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் நிதிக்கு ஆதரவாக, அவர்கள் செய்யச்சொல்லும். அதனால் நாட்டுக்கு எதிரான பல செயல்களை காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கேஜரிவால் போன்ற பல எதிர் கட்சிகள் அதை செய்கிறது.

இந்த விஷயங்களில் வெளிநாட்டு சக்திகள், கிறிஸ்தவ அமைப்புகள், மீடியாக்கள், NGO க்கள், காங்கிரஸ், திமுக, கேஜரிவால், மமதா, சீன கொத்தடிமை கட்சிகள் போன்ற கேடுகெட்ட சக்திகளை இணைப்பது அமெரிக்கா, சீனா, பிரிட்டிஷ் போன்ற நாடுகளே.

எனவே மீடியா சொல்வது எல்லாம் முற்றிலும் பொய் என்று சொல்ல நாம் ஒன்றும் முடியாது. ஆனால் தேவையான இந்த உண்மையை இந்திய தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது அதானியும், அம்பானியும் ஏன் அடிக்கடி பேசப்படுகிறார்கள், குறிப்பாக அதானியின் அமைப்புகள் ஏன் தாக்கப்படுகிறது என்று உங்களுக்கு புரியும். விடை தெரியாமல் ஒரு சந்தேகப்பார்வை நம்முள் தோன்றி நம் மன சாட்சி சங்கடப்படுத்தும். அதற்கான பதில்தான் இந்த நீண்ட பதிவு. நம் எதிரி எல்லை மீறும்போது நாமும் சில சமாதானங்களை செய்து கொள்ளத்தான் வேண்டும். இல்லாவிடில் இல்லாமல் போய் விடுவோம். இந்தியா வேகமாக வளர இதுவும் அவசியம்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil