சம்பள பாக்கியில் 50சதவீதம் உடனே தரணும்..! அமைச்சர் வலியுறுத்தல்..!

சம்பள பாக்கியில் 50சதவீதம் உடனே தரணும்..! அமைச்சர் வலியுறுத்தல்..!
X
என்னடா இது பைஜூவுக்கு வந்த சோதனை என்பது போல பைஜூ முன்னாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதற்கு தொழிலாளர் அமைச்சர் தலையிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Byju’s Overdue Salaries of Former Employees, Settle Overdue Salaries of Former Employees, Karnataka Labour Minister, Santosh Lad, Think and Learn Pvt Ltd, Outstanding Dues, Former Employees, NCLT, Settlement, Labour Department, Full and Final Settlements, Termination

பைஜூவின் துயரங்கள்:

பைஜூவின் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு முன்னாள் ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக தொழிலாளர் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Byju’s Overdue Salaries of Former Employees

கர்நாடக தொழிலாளர் அமைச்சர், பைஜூவின் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, ஒழுங்குமுறை மேற்பார்வையின் மத்தியில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள முன்னாள் ஊழியர்களின் சம்பளத் தொகை கவலை அளிப்பதாக உள்ளது. நீங்கள் அளித்துள்ள உத்தரவாதத்தின்படி வழங்கப்படமால் உள்ள சம்பளத்தை தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கர்நாடக தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் லாட், பைஜூவின் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் பிரதிநிதிகளை சந்தித்து, முன்னாள் ஊழியர்களுக்கு செலுத்தப்படாத நிலுவைத் தொகைகள் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியுள்ளதாக இன்று (ஜூலை 2ம் தேதி செவ்வாய்கிழமை) மணிகண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.

Byju’s Overdue Salaries of Former Employees

அறிக்கையின்படி, பெங்களூரில் உள்ள விகாசா சவுதாவில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் லாட், முன்னாள் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 50சதவீத நிலுவைத் தொகையை உடனடியாகத் தீர்க்குமாறு எட்-டெக் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மீதமுள்ள 50சதவீதத்தை உரிய காலத்தில் பின்பற்றப்படும் என்று உறுதியளித்தார்.

லாட் மனிகண்ட்ரோலிடம் கூறும்போது , “முன்னாள் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் குறைந்தபட்சம் 50சதவீத தொகையை விரைவில் செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மீதமுள்ள 50சதவீதத்தை சரியான நேரத்தில் செலுத்தப்பட வேண்டும். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) அவர்களது நிதி எஸ்க்ரோ அக்கவுண்ட்டில் இருப்பதாகவும், ஜூலை 4 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, நிலுவைத் தொகையை செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பை எங்களுக்குத் தருவார்கள். "

சுமார் 160 முதல் 200 பேர்கொண்ட முன்னாள் ஊழியர்கள், தொழிலாளர் துறையை தொடர்பு கொண்டதாகவும், மொத்த நிலுவைத் தொகை சுமார் ரூ.4.5 கோடி என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். "சில ஊழியர்கள் எங்களை நேரில் அணுகியுள்ளனர். பெரும்பாலானவர்கள் எங்கள் துறைக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர்," என்று லாட் மனிகண்ட்ரோலிடம் கூறினார்.

Byju’s Overdue Salaries of Former Employees

தொழிலாளர் துறையின் முதன்மைச் செயலாளர் முகமது மொஹ்சின், NCLT யிடமிருந்து நிவாரண உத்தரவைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்துவதாக அவர்கள் எங்களுக்கு உறுதியளித்ததாக செய்தி வெளியீட்டிற்குத் தெரிவித்தார்.

பணிநீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாகியும் தங்களின் முழுமையான மற்றும் இறுதி தீர்வுகள் கிடைக்கவில்லை என்று முன்னாள் பைஜூ ஊழியர்களிடமிருந்து தொழிலாளர் துறைக்கு ஏராளமான மின்னஞ்சல்கள் சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!