Budget 2024-இடைக்கால பட்ஜெட்2024-ன் முக்கிய சாராம்சங்கள்..!

Budget 2024-இடைக்கால பட்ஜெட்2024-ன்  முக்கிய சாராம்சங்கள்..!
X

Budget 2024-மும்பையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் 2024 ஐ சமர்பிக்கும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மக்கள் பார்க்கிறார்கள்.(பிடிஐ)

மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் பயணிப்பதுடன், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.

Budget 2024, Nirmala Sitharaman,Union Finance Minister,House Acquisition Scheme,Rented Accommodations,Slums,PM Awas Yojana

2024ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 6 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அவர், சரியாக 1 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார். அதன்படி காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் 12 மணிக்கு நிறைவடைந்தது.

Budget 2024

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும். சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் வழங்கப்படும்.

வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 49,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளுக்கு நிகாராக மேம்படுத்தப்படும். மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும்.

Budget 2024

வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும்.

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்.

கடல் உணவு ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ள நிலையில், 2 இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் பூங்கா அமைக்கப்படும்.

517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் 1000 புதிய விமானங்கள் வாங்கப்படும்.

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 18 வயது பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

வெவ்வெறு பெயர்களில் செயல்படும் மகப்பேறு திட்டங்களை ஒரே திட்டமாக ஒருங்கிணைக்க முடிவு. ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்.

Budget 2024,

ரேஷனில் இலவச பொருட்கள்

80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளாதாகவும் நீர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கி கணக்கில் மானியம் வரவு

11.8 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் அரசின் மானியம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

திறன்மிகு இந்தியா திட்டத்தின் மூலமாக 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

Budget 2024,

வேளான் காப்பீடு

இந்தியாவில் உள்ள 4 கோடி விவசாயிகளுக்கு இலவச வேளான் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

பெண்களின் கல்வி அறிவு உயர்வு

கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் உயர் கல்வி பெறுவது 28% அதிகரித்துள்ளது.

முத்ரா கடன்

பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.34 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளன.

முத்தலாக் ரத்து

முத்தலாக் ரத்து சட்டம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளன.

பணவீக்க விகிதம்

இந்தியாவின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் வைத்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Budget 2024,

வர்த்தக மண்டிகள் இணைப்பு

1361 மண்டிகள் மின்னணு இணைப்பின் மூலமாக இணைக்கப்பட்டுள்ளதால் 1.8 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும் ரூ.3 கோடி அளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருவாய் அதிகரிப்பு

மக்களின் வருவாய் 50% உயர்ந்துள்ளது.

11.27: வளர்ச்சியே இலக்கு

வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நிலைநிறுத்தும் பொருளாதாரக் கொள்கைகளை அரசு பின்பற்றும் என்று நிதியமைச்சர் சீதாராமன் கூறினார். இது சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் கொள்கைகளால் வழிநடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வாடகை வீடுகள், குடிசைப்பகுதிகள், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்களுக்கு உதவும் வகையில் அரசு ஒரு திட்டத்தை தொடங்க உள்ளது.

Budget 2024,

3 முக்கிய ரயில்வே காரிடார் உருவாக்கப்படும்

துறைமுக இணைப்பு காரிடார், எரிசக்தி, கனிம மற்றும் சிமென்ட் காரிடார் மற்றும் அதிக போக்குவரத்து காரிடார் ஆகியவை உருவாக்கப்படும் என தெரிவித்தார். இந்த சிறப்பு காரிடார் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

சார்ஜிங் மையம் உருவாக்கப்படும்

அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் தேவைக்கு ஏற்ப பவர் சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்படும்.

Budget 2024,

ஜிடிபி வளர்ச்சி

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கணக்கு பற்றாக்குறை 5.8% மாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி வசூல் உயர்வு

கடந்த 10 ஆண்டுகளில் வரி வசூல் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!