பிளானை மாற்றிய பி.எஸ்.என்.எல்..! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!

பிளானை மாற்றிய பி.எஸ்.என்.எல்..! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!

பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டங்கள் (கோப்பு படம்)

ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியதால் பலர் பி.எஸ்.என்.எல் -க்கு மாறினார்கள்.

நமது நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் தங்களது ரீசார்ஜ் பிளானுக்கான விலையை 15சதவீதம் உயர்த்தி அறிவித்தன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் என இரு தரப்பு வாடிக்கையாளர்களுமே பாதிக்கப்பட்டார்கள்.

இந்த விலையேற்றத்தின் காரணமாக பல்வேறு வாடிக்கையாளர்களும் இந்தியாவின் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு தங்களை மாற்றிக் கொண்டார்கள். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்களை வழங்குவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களைப்போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் தன்னுடைய ரூ. 485 ரீசார்ஜ் திட்டத்துக்கான வேலிட்டிட்டியை குறைத்துவிட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.485 க்கு ரீசார்ஜ் செய்தால் 82 நாட்கள் வரை வேலிடிட்டியை அளித்து வந்தது. தற்போது 82 நாட்கள் வேலிடிட்டி என்பதை 2 நாட்கள் குறைத்து 80 நாட்கள் மட்டுமே அளிக்கப்படுவதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு முன் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒட்டு மொத்தமாக 80 நாட்கள் வேலிட்டிட்டியுடன் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

சுருங்கச்சொன்னால் , ரீசார்ஜ் பிளானிங் வேலிடிட்டியை தற்போதைய நிலவரப்படி பிஎஸ்என்எல் ரூ.485 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது. இதற்கான வேலிடிட்டி 80 நாட்கள். மேலும் பிஎஸ்என்எல் சமீபத்தில் தான் தன்னுடைய 4ஜி நெட்வொர்க்கை கவரேஜ் விரிவாக்கம் செய்துள்ளதால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் எல்லைகள் அருணாச்சல பிரதேசத்தின் மலப்பூ எனும் இடத்தில் இருந்து 14 6500 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக்கின் போப்ராங் என்னும் இடம் வரையில் கவரேஜ் அதிகரித்துள்ளது.

நாட்களைக் குறைத்து கூடுதலாக 40 ஜிபி டேட்டாவை அதே விலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்த திட்டம் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். மேலும் இந்திய தொலைதொடர்பு துறையும் இந்த விரிவாக்கத்தை உறுதி செய்துள்ளது. இனி பிஎஸ்என்எல் 4ஜி சேவையானது அருணாச்சல பிரதேசம் மலப்பு பகுதியில் உள்ள அனைவருக்கும் தடையின்றி கிடைக்கும்.

மேலும் சமீபத்தில் இந்தியாவின் முதன் முதலில் போன் கால் செய்யப்பட்ட கிராமமான நபியில் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் வரவை சிறப்பித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது.

உத்தரகாண்டில் அமைந்துள்ள அந்த கிராமத்தில் இதற்கு முன் தொலைதொடர்பு சேவைகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பிஎஸ்என்எல் இந்த நெட்வொர்க் கவரேஜ் விரிவாக்கத்திற்குப் பின் இந்தியாவின் 98 சதவீத பகுதிகள் நெட்வொர்க் கவரேஜிற்குள் வந்துள்ளன. இதில் தொலைதூர மலை பிரதேசங்களும் அடக்கம்.

அதேபோல பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2025ம் ஆண்டிற்குள் 5G சேவையை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. அதன்மூலமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மறுபடியும் புத்துயிர்பெற்று எழுச்சிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story