என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?

என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?
X
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஒரு மணமகன் கேட்ட கோரிக்கைகளை அறிந்த மணமகள் மற்றும் அவரது வீட்டார் அதிர்ச்சிக்குளாகினர். ஏன்..?

Bridegroom's Demand on his Marriage, Rajasthan, Jaipur Marriage News

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மணமகன் தரப்பு கோரிக்கைகளால் மணமகளின் குடும்பத்தினர் சும்மா ஆடிப்போவிட்டனர். அதுவும் குறிப்பாக மாப்பிள்ளை பையன் குறிப்பிட்டு கேட்டது மணப்பெண் உட்பட அனைவரையும் திகைக்கச் செய்துவிட்டது.

Bridegroom's Demand on his Marriage

அட அப்படி என்னதான்யா மாப்பிள்ளை கேட்டுவிட்டார்.? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.பீடிகை போடறீங்களே..என்று நீங்கள் கொஞ்சம் உஷ்ணமாவது தெரிகிறது. சொல்லிடலாம்...

திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை பையன் குடும்பத்தின் தனித்துவமான கோரிக்கைகளால் மணப் பெண்ணின் பெற்றோர் ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.

மாப்பிள்ளை பையனின் கோரிக்கைகள் ஜெய்ப்பூர் நகர் முழுவதும் விவாதிக்கப்படும் பொருளாக மாறிவிட்டது. அட..சொன்னதையே சொல்லாமல் சொல்லுமய்யா..(ஓகே..ஓகே கூல் )

ஆனால் அந்த கோரிக்கைகள் அம்புட்டும் வரதட்சணை பற்றியது அல்ல மாறாக... திருமணம் நடத்தப்படும் முறை குறித்தும் நியாயமில்லாத மரபுகள் பற்றியது. மாப்பிள்ளை பையனின் கோரிக்கையை பெண் வீட்டாருக்கு ஒருவர் வாசித்துக்காட்டினார்.

Bridegroom's Demand on his Marriage

மாப்பிள்ளை பையனின் கோரிக்கைகள் :

திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பு நடத்தக்கூடாது.

திருமணத்தில் மணமகள் லெஹங்காவிற்கு பதிலாக சேலை அணிய வேண்டும்.

ஆபாசமான, தரமற்ற மற்றும் காதை பிளக்கும் இசைக்கு பதிலாக, இலகுவான இசைக்கருவி இசை மணமேடையில் இசைக்கப்படவேண்டும்.

மாலைமாற்றும் நிகழ்வின்போது மணமக்கள் மட்டுமே மேடையில் இருக்கவேண்டும்.

மாலைமாற்றும் நிகழ்வில் மணமகனையோ அல்லது மணமகனையோ தூக்குபவர்கள் திருமணத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

பண்டிட்ஜி திருமணத்தை ஆரம்பித்தவுடன், அவரை யாரும் தடுக்கக்கூடாது.


ஒளிப்பதிவாளர் பண்டிட்ஜியை மீண்டும் மீண்டும் குறுக்கீடு செய்துடன் அவர் செய்யும் சடடங்குகளுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது. மேலும் தூரத்தில் இருந்து பண்டிட்ஜி செய்யும் சடங்குகளை படம் எடுக்கவேண்டும்.

Bridegroom's Demand on his Marriage

இது தெய்வங்களைத் தங்கள் திருமணத்தில் சாட்சியாக ஆவாஹனம் செய்து நடத்தப்படும் திருமணச் சடங்கு.. இது எந்த சினிமாவுக்குமான படப்பிடிப்பும் அல்ல.

ஒளிப்பதிவாளரின் அறிவுறுத்தலின்படி மணமகனும், மணமகளும் -(அப்படி நில்லுங்க..தோள் மீது கைபோடுங்க..கன்னத்தில் கையை மடக்கி வைத்து அழகு காட்டுங்கள்) - போன்ற சினிமாத்தனமான போஸ் கொடுக்க மாட்டார்கள்.

திருமண விழா பகலில் இருக்க வேண்டும். மாலைக்குள் விடைபெற வேண்டும். அதனால் எந்த விருந்தினரும் நள்ளிரவு 12 முதல் 1 மணிக்குள் உணவு உண்பதால் ஏற்படும் தூக்கமின்மை, அமிலத்தன்மை ஏற்படுதல் போன்ற உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியநிலை ஏற்படாது.

இது தவிர, விருந்தினர்கள் தங்கள் வீடுகளை அடைய நள்ளிரவு வரை நேரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் எங்கள் திருமணத்தால் வேறு எந்த சிரமத்தையும் சந்திக்கக்கூடாது.

எல்லோர் முன்னிலையிலும் யாரேனும் (நண்பர்களோ, உறவினர்களோ ) கட்டிப்பிடிக்கச் சொன்னால் உடனே திருமணத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

திருமணத்தில் எந்த வகையான இறைச்சி மற்றும் மதுபானம் எதுவும் இருக்காது. வழங்கப்படாது. திருமணத்தில் ஆண் தெய்வங்களும் பெண் தெய்வங்களும் இணைந்து அவர்கள் முன்னால் நடத்தப்படும் திருமணமாகும்.

Bridegroom's Demand on his Marriage

அந்த புனிதமான வைபவத்தில் இறைச்சி மற்றும் மதுவைக் கண்டால் தேவர்களும், தெய்வங்களும் கோபமடைந்து மணமகன் மற்றும் மணமகளை ஆசீர்வதிக்காமல் சென்று விடுவார்கள்.

இதுதாங்க மாப்பிள்ளை பையன் கேட்கும் கோரிக்கைகள். என்று படித்து முடித்தார். மணமகளின் தந்தை, மணமகளின் தாய் மற்றும் மணமகள் மூன்றுபேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மாப்பிள்ளை, நூறு பவுன் தங்கம் கேட்கவில்லை அல்லது கார் வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரு பண்பான மனிதராக இந்த நியாயமான கோரிக்கைகளைக் கேட்டுள்ளார். நீ..என்னம்மா சொல்ற..என்று மணமகளைக் கேட்க.. மணமகள் வெட்கமாக தலை கவிழ்ந்தார்.

ஓகே சொல்லுங்கப்பா..என்றார் சத்தமாக..

மாப்பிள்ளை பையனின் அனைத்து கோரிக்கைகளையும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். ஜாம் ஜாம்.. சாரி மாப்பிள்ளை சொன்னதுபோல எளிமையாக ஒரு பண்பாடான திருமணம் நடந்து முடிந்தது.

Bridegroom's Demand on his Marriage

சமூக முன்னேற்றத்திற்கான பயனுள்ள ஆலோசனைகள் என்று உள்ளூரில் ஒரே பேச்சு.

இது அனைவருக்கும் முன்மாதிரியான ஒரு திருமணம். திருமணம் என்பது புனிதமான பந்தம். அதை ஒரு எல்லைக்குள் வைத்து நாம் கொண்டாடவேண்டும். நமது பழைய பாரம்பரியம் என்பது சிறப்புக்குரியது. அது ஒன்றும் பழைய பஞ்சாங்கம் அல்ல. பண்பாடுகளின் பிறப்பிடம். அதை பின்பற்றுங்கள்..ஆடம்பரத்தை தவிர்த்துவிடுங்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!