பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா:தமிழ் மொழித்திறன் போட்டிகள் அறிவிப்பு

பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா:தமிழ் மொழித்திறன் போட்டிகள் அறிவிப்பு
X
போட்டி நேரடியாக நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நூல்கள், பொற்கிழி அளிக்கப்படும்.

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெறு 2-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பெங்களூரு பொதுமக்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டிடுஷன் ஆஃப் எஞ்சினியர்ஸ், # 3, பி.ஆர்.அம்பேத்கர் வீதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில், பெங்களூரு-560 001- என்ற முகவரியில் வரும்( 03.12.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10. மணிக்கு கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, சொற்பொழி வுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தப்பரிசு ரூ.18 ஆயிரம். முதல் பரிசு- ரூ.3 ஆயிரம்,

இரண்டாம் பரிசு- ரூ.2 ஆயிரம்,மூன்றாம் பரிசு- ரூ.1 ஆயிரம்.

வயது வரம்பின்றி கருநாடகத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்கலாம். ஏதெனும் ஒரு போட்டியில் மட்டும் கலந்துகொள்ள முடியும்.பங்கேற்கும் பொதுமக்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நூல்கள், பொற்கிழி அளிக்கப்படும்.போட்டி நேரடியாக நடத்தப்பட்டு, முடிவுகள் உடனே அறிவிக்கப்படும்.

தலைப்புகள்:

கட்டுரைப்போட்டி: கருநாடகத் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் (60 நிமிடங்கள், 300 சொற்கள்)

கவிதைப் போட்டி: நிலைதவறாமல் நெருப்பெனத் திகழ்க! (24 வரிகள், 45 நிமிடங்கள்)

பேச்சுப் போட்டி: ‘முதற்படியாய்த் தமிழ்ப் படி’ (5 நிமிடங்கள்)

போட்டியில் கலந்துகொள்ள 25.11.2023 -க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

முன்பதிவுக்கு: https://forms.gle/cqkqKqH9yfDWNcbJ8.

கூடுதல் விவரங்களுக்கு: 7899192588. பொறுப்பாளர்கள் புலவர் கார்த்தியாயினி,முனைவர் தி.சரசுவதி ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்