போருக்கு தயாராக இருங்கள்..! ராஜ்நாத்சிங் ஏன் சொன்னார்..?

போருக்கு தயாராக இருங்கள்..!  ராஜ்நாத்சிங் ஏன் சொன்னார்..?
பாதுகாப்புத்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய ராணுவ வீரர்களை சந்தித்தபோது 
எந்த நேரமும் போருக்கு தயாராக இருங்கள் என ஏன் சொன்னார் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

இவ்வாண்டில் மூன்றில் இரண்டு பங்கை கடந்த சூழ்நிலையில்... இந்தியா என்ன செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது தேசம் பொருளாதார வளர்ச்சி விகிதாச்சாரம் நடப்பு ஆண்டில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால் சுணக்கம் காணவில்லை. தேர்தல் முடிவுகள் கொஞ்சம் நம் இந்திய பொருளாதாரத்தை அசைத்து பார்த்திருக்கிறதென்னவோ உண்மை .... ஆனால் சாய்ந்து விடவில்லை.

இவ்வாண்டில் பொருளாதாரத்தில் மிகவும் நுணுக்கமான வேலைகளை முன்னெடுத்து வருகிறார்கள். இங்கு உள்ள ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டாத ... அதேசமயம் மிக மிக முக்கியமான நகர்வு ஒன்றை நோக்கி நகர துவங்கி விட்டனர். இஃது வெகு நிச்சயமாக உலக அரசியல் சமநிலையையே மாற்றி அமைக்க கூடியதாக..... அதே சமயம் நம் தேசத்தின் குரல்வளையை நெரிக்கும் அளவிலான பிரச்சினைகளை தூண்டி விடும் விதமாக சூழலை உருவாக்க கூடியதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

இஃது தென்னை மரத்தில் தேள் கொட்டினால்....பனை மரத்தில் நெறி கட்டும் போலான விஷயம்.

கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்ற நமது பாரதப் பிரதமர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். கடந்த மாதத்தில் உக்ரைன் சென்றவர் அங்கு ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேசினார். இவையெல்லாம் பத்திரிகையில் வந்த செய்திகள். இத்தனைக்கும் பிறகும் உக்ரைன் ரஷ்யா போர் நின்றபாடில்லை...... அப்படி என்றால் பேச்சுவார்த்தை..?

இதோ நமது பிரதமர் வரும் நாட்களில் அமெரிக்கா செல்லவிருக்கிறார். என்ன தான் நடக்கிறது இதன் பின்னணியில்......

முதலில்..., உக்ரைன் ரஷ்யா மோதல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆணானப்பட்ட ரஷ்யா அப்படி என்பதற்குள்... ஜெயித்து விடும் என்றனர். ஆனால் நடந்ததே வேறு. சரி...... மறுபக்கத்தில் உக்ரைனுக்கு பின்னால் கிட்டத்தட்ட அனைத்து மேற்குலக நாடுகள் அத்தனையும் அணி வகுத்து நிற்க.. ஜெலன்ஸ்கி படாடோபமாக பல நாடுகளின் சபைகளில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஆரவாரத்துடன் இந்த போரை நடந்த.... ரஷ்யர்களை ஓட ஓட விரட்டும் வெற்றி நாயகன் என்கிற ரீதியிலான அலப்பறைகளுக்கு மத்தியில் ஆட்சி செய்து கொண்டுள்ளார்.

இன்றுள்ள நிலையில் உக்ரைன் போருக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் சுமார் 3.76% நிலப்பரப்பை ரஷ்யாவிடம் இழந்து நிற்க.... மறுபக்கத்தில் ரஷ்யா 0.13% மட்டுமே இழந்து இருப்பதாக புள்ளி விவர அறிக்கை, அதிர்ச்சி தகவல் ஒன்றை சொல்லியிருக்கிறது.

இதெப்படி.....????

பிறகு இத்தனை நாள் மேற்கு உலக ஊடகங்கள் சொன்னதெல்லாம்...... வேறென்ன... பொய்யா.

உலகின் முன்னணி நாடுகளின் மொத்த பொருளாதார தடை அமலில் இருக்கும் ரஷ்யாவின் பொருளாதாரம் எந்த நிலையில் தற்சமயம் இருக்கின்றது என்கிற அறிக்கையும் இதனோடு சேர்ந்தே வெளிவந்திருக்கிறது.

அதில்...... ரஷ்ய பொருளாதாரம்.? மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வருகிறது என அதிர்ச்சி அளித்திருக்கிறது. அதிர்ந்து போய் நிற்கிறது மேற்குலகம். எப்படி... எதனால் என ஆராய்ந்து பார்த்தவர்களின் பார்வை முதலில் விழுந்தது நம் இந்திய தேசம் மீது தான். நாம் வாங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்., உக்ரைனும் இதில் விதிவிலக்கல்ல. நாம் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் கிடைக்கும் பணம் அவர்களை...... ரஷ்யர்களை செழிப்புடன் வைத்திருப்பதாக நினைத்து கொண்டு இருக்க... நம்மவர்கள் இதனை முன்னரே யூகித்து விரிவாக பதிலளிக்க மேலும் ஆடிப் போய் இருக்கிறார்கள் மேற்குலக வாசிகள்.

அதாவது..... ரஷ்யாவிடம் கடந்த காலத்தில் யுத்த ஆயுத தளபாடங்களை வாங்கவும், நீர் மூழ்கிக் கப்பல்களை கட்டவும் கொடுத்திருந்த முன் பணத்தை அந்த ஆர்டர்களை கேன்சல் செய்து, பொருளாதார தடை அமலில் காரணமாக பெற முடியாத தளவாட பொருட்களுக்கு ஈடாகவே கச்சா எண்ணெய் பெறப்பட்டு வருகிறது என்பதையும் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி.... மேலும் இவையெல்லாம் ரஷ்யா பொருளாதார பங்களிப்பில் 5.83% மட்டுமே என்கிற புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டிட..... இருண்டு போய் நிற்கிறது மேற்குலகம்.

இத்தனை தூரம் அவர்கள் மெனக்கெட காரணம்..... மேற்குலக நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதாச்சாரம் 1.57% ஐக் கூட எட்டிப் பிடிக்கவே இல்லை என்பது தான் இதன் பிரதான அம்சம். ஆனானப்பட்ட அமெரிக்காவின் GDP வளர்ச்சி இதுவரையில் இல்லாத அளவிற்கு சரிந்து 1.374% விகிதாச்சாரத்தில் இருப்பதாக கிலி கொடுத்து இருக்கிறது.

இது அவர்களை..... கடன் வாங்கும் நிலைக்கு கொண்டு செல்ல... அமெரிக்காவும் கடன் வாங்கி இருக்கிறார்கள்... யாரிடம் இருந்து..? அவர்களிடம் இருந்தே., அதாவது அமெரிக்கர்களிடம் இருந்தே கடன் பெற்று இருக்கிறார்கள்......சுலபமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால்.... டாலர்களை அச்சடித்து வருகிறார்கள் என்பது தான் இதற்கான விடை.

அது அப்படி தான்..... அமெரிக்காவின் கடந்த கால வரலாற்றில் இது எல்லாம் சகஜமாக ஒன்று தான். இது என்ன அநியாயமாக இருக்கின்றதே என்பவர்களுக்கு... உலக அரசியல் பொருளாதார நிலைப்பாடு பற்றி ஏதும் தெரியாத வெள்ளேந்தியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று பொருள்.

கொஞ்சம் நுட்பமான ஆராய்ந்து பார்த்தால்..... அமெரிக்க டாலர் என்பதின் நிகர மதிப்பு என்பது அதற்கீடான தங்கம் மாத்திரமல்ல துணை கால் போல் திரவ தங்கத்திலும் தான் என்பது புகை மூட்டம் போலும் தெரியவரும். பொதுவாக பணத்தின் மதிப்பு என்பது அதன் சமன்பாட்டிற்கீடான மதிப்பில் தங்கம் இருப்பதாக பொதுவில் கொள்ள வேண்டும். இதற்கு தான்...இதனை நிர்வகிக்க தான்.... வங்கி ஆளுநர் வருகிறார்..... இருக்கிறார். நமது ரூபாய் நோட்டுகளில் கூட I pay the sum of rupee..... என்கிற வார்த்தைக்கு ஆளுநர் கையெழுத்து போட காரணமும் அதுவே.

இங்கு அமெரிக்கா.... ஓர் தில்லாலங்கடி வேலையை காலங்காலமாக செய்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் அச்சடிக்கும் பணத்தை அதாவது டாலரை தங்கத்தோடு மட்டுமில்லாமல் திரவ தங்கத்திலும் வர்த்தக வரவு செலவு கணக்கு ஒன்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். சுலபமாக சொன்னால் உலகெங்கும் கிடைக்கும் கச்சா எண்ணெயின் விலை டாலர்களில் நிர்ணயம் செய்து பம்மாத்து காண்பித்து வருகிறார்கள்.

உதாரணத்திற்கு 90 களில் இருந்த கச்சா எண்ணெயின் விலையில் டாலரின் மதிப்பிற்கும் இன்றுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலையை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இது சுலபமாக புரிந்து போகும். புழக்கத்தில் உள்ள டாலர்களின் மதிப்பிற்கும் இருப்பில் உள்ளதாக அமெரிக்கா சொல்லும் டாலருக்கு நிகரான தங்கத்தின் அளவிற்கும் ஏகப்பட்ட முரண்பாடு உள்ளது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.....

அப்படி என்றால்....அமெரிக்க பொருளாதாரம்.... அவர்களின் ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பு..... ஓர் நீர் குமிழிக்கு சமானம். எப்போது வேண்டுமானாலும் புஸ்ஸ்ஸ்ஸ்....

இதனை முன்னரே யூகித்த.. அல்லது கணித்தவர்கள்.... ஐரோப்பிய நாடுகளில் சிலர்... இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே டாலருக்கு எதிராக யூரோ கரன்சியை கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று இந்த ஐரோப்பிய தேசங்கலே....... பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை.

அப்போது அந்த சமயத்தில் விளாடிமிர் புடின் உலக அரசியலில் குழந்தை...... ஆனால் இன்று அப்படி அல்ல. அதற்கு சான்று அவர் இன்று கட்டி ஆளும் ரஷ்யா, அதன் பொருளாதார வளர்ச்சி விகிதாச்சாரம். இந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வரும் போரில்..... அவர் என்றோ ஜெயித்து இருக்க வேண்டும்.... மாறாக அதனை செய்யாமல் போரில் ஈடுபட்டு வரும் மேற்கு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் கைவைத்திருக்கிறார். உதாரணத்திற்கு...... பல ஊடகங்களில் சொல்வது போல் பாகிஸ்தான் சிதறுண்டு போவதற்கு நாள் பார்த்து வருகிறது என்பது போல் நிஜத்தில் இங்கிலாந்து சிதறுண்டு மூன்று பிரிவுகளாக.... பிரிந்து போவதற்கே காலம் கனிந்து வருகிறது.

மூன்று பிரதான நிலப்பரப்பின் அடையாளம் தான் இங்கிலாந்து. இது நம்மில் பலருக்கு தெரியாத சங்கதி. ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் லண்டன் ஆகியவை சேர்ந்ததே இங்கிலாந்து. மீண்டும் பீய்த்து கொண்டு செல்லும் அளவுக்கு பிரச்சினைகள் அங்கு முற்றி இருக்கிறது. இதற்கான விதை யூரோ கரன்சியை கொண்டு வந்த சமயத்தில் வந்தது. பற்ற வைத்த மஹானுபாவர் அமெரிக்கா. இன்று அது ஜெர்மன் பிரான்ஸ் வரை பரவியுள்ளது.

மிகப் பெரும் நிலையில்லா தன்மையை நோக்கி உலக அரசியல் நகர்வுகள் ஆரம்பித்துள்ள நிலையில்.... நம் இந்திய தேசம் என்னவாக உருமாறி கொண்டு வருகிறது...

கொஞ்சம் பழங்கால டெக்னிக் தான் ஆனால் புதுமையான முறையில் முயற்சித்து வருகின்றனர். பண்ட மாற்று முறை தான் , ஆனால் தங்கத்தை உள்ளே கொண்டு வந்து இருக்கிறார்கள்.... கரன்சிக்கு பதிலாக. உதாரணத்திற்கு, இந்திய ரூபாய் ரஷ்ய ரூபிள் வர்த்தகம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் இதற்கு இடையில் பொதுவாக தங்கம் இருப்பதாக புரிந்து கொண்டு பாருங்கள்... விஷயம் சுலபமான புரிந்து போகும்.

இன்னமும் நுட்பமாக சொன்னால்.... திரவ தங்கத்திற்கும் மாற்றீடாக நிஜ தங்கமே வர்த்தக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆக டாலரை தவிர்த்து விட்டார்கள். அப்படி என்றால்..... நாளாக நாளாக டாலரின் பயன்பாடுகள் குறையக் குறைய அமெரிக்க ஆதிக்கமும் இந்த பிராந்தியத்தில் குறையும் என்பது ஒரு கணக்கு.

நாளாக நாளாக டாலர் தேசம் இந்த பிராந்தியத்தில் இருந்து அகற்றப்படும் அளவிற்கு வர்த்தகம் வேறு திசையில் பயணிக்கும். ஏற்கனவே இதற்கான அச்சாரம் போட்டு வேலைகளும் ஓடிக் கொண்டிருக்கிறது. சீனா அரபு உலக தேசத்தில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இது போல் ஆரம்பித்து வைக்க... நம் இந்திய தேசமும் ரஷ்யா மற்றும் அதே அரபு உலக தேசங்களில் கை கோர்த்து இருக்கிறார்கள்.

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இந்தியா ரஷ்யா மற்றும் அரபு உலக தேசங்களில் வர்த்தகம் ஒரு பக்கமாகவும்..... சீனா ரஷ்யா மற்றும் அரபு உலக தேசங்களில் வழியாக ஐரோப்பிய நாடுகள் வரையில் வர்த்தகம் என்பதாக புரியும்.

இது உலக அரசியல் சமன்பாடுகளை வெகு நிச்சயமாக மாற்றி அமைக்க போகும் காரணியாக மாறிடக்கூடியது என அரசியல் பார்வையாளர்கள் அவதானிக்கிறார்கள்.

இந்த பொருளாதார யுகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கப்போவது நுண்ணறிவு சார்ந்த தொழில் நுட்ப பண்புகள். நம்மவர்களை இதில் அடித்துக் கொள்ள ஆளேயில்லை என்பது போன்ற செயல் திட்டங்களை தற்போதைய மத்தியில் ஆளும் அரசு கையில் எடுத்து இயங்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதே இன்றைய நிதர்சனமான உண்மை. இது தான் அமெரிக்காவை அசைத்து பார்த்து விட்டது.

ஆட ஆரம்பித்து இருக்கிறார்கள்... அங்கு ஆள்பவர்களை ஆடிப் படைக்கும் நிழல் உலகம். இங்கும், வரும் நாட்களில் மிகத் தீவிரமான பிரச்சினைகள் எல்லாம் தலை எடுக்க ஆரம்பிக்கும். அதற்கு உண்டான அச்சாரம் தான் அங்கு இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெறக் கூடும் என இப்போதே இங்கு உருட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

தவிர நமது தேசத்தை சுற்றிலும் உள்ள மிகச் சிறிய நாடுகளில் எல்லாம் சி...ஏ.ஐ கைவரிசை காட்ட ஆரம்பித்து விட்டதை கண் கூடாக பார்க்கலாம். இவ்வாண்டு இறுதிக்குள் மிக தீவிரமாக இவையெல்லாம் மாறிடக்கூடும்.

முன்பு போல் நமது ராணுவம் வெறுமனே நில்லாமல் துணிந்து நேரிடையாக களத்தில் இறங்க தயாராக இருக்கும் படி தற்போதைய நம் இந்திய அரசின் செயல்பாடுகள் மாற்றம் கண்டு இருக்கிறது.

ஆக..... எல்லாவற்றுக்கும் தயாராக நாம் நகரத்துவங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டுமே இன்றைய தேதியில் நிதர்சனமான உண்மை. புலிப்பாய்ச்சல் இனி செயலில்...என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் நம்மவர்கள்.

Tags

Next Story