சட்டக்கல்லூரியில் சட்டம் பயிலாமல் பார்கவுன்சில் தலைவராக இருந்த செஸ்ஸி சேவியர்

சட்டக்கல்லூரியில் சட்டம் பயிலாமல் பார்கவுன்சில் தலைவராக இருந்த செஸ்ஸி சேவியர்
X

செஸ்ஸி சேவியர்

கேரளாவில் செஸ்ஸி சேவியர் என்பவர் சட்டக்கல்லூரியில் சட்டம் படிக்காமல் பார்கவுன்சில் தலைவராக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் சட்டக்கல்லூரியில் சட்டம் படிக்காமல் பார்கவுன்சில் தலைவராக செஸ்ஸி சேவியர் என்பவவர் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் குட்டநாடு ராமன்கரி பகுதியை சேர்ந்தவர் செஸ்ஸி சேவியர். மாவட்ட பார்கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார். சில வழக்குகளில் வழக்கு ஆணையராகவும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மர்மான கடிதம் ஒன்று பார் அசோசியேசனுக்கு வந்துள்ளது. அதில் செஸ்ஸி சேவியர் சட்டக்கல்லூரியில் பயிலவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையறிந்த நீதிபதிகள் ஆடிப்போய்விட்டனர். பல வழக்குகளில் இரண்டு வருடத்திற்கு மேலாக ஒரு போலி வழக்கறிஞருடன் பணிபுரிந்ததை நினைத்து வருத்தப்படுவதாக தெரிவித்தனர்.

அதையடுத்து பார்கவுன்சில் செஸ்ஸியின் ஆவணங்களை சமர்ப்பிக்க ஆணையிட்டது. செஸ்ஸி சேவியர் தயங்காமல் ஒரு என்ரோல்மென்ட் நம்பரை கொடுத்துள்ளார். அதை சரிபார்க்கையில் அது இன்னொரு வக்கீலுடையது என கண்டுபிடிக்கப்பட்டது.பார்கவுன்சில் 24 மணிநேரம் கெடு கொடுத்து அவரை வெளியேற்றியது. பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில், சட்டக்கல்லூரியில் சேர்ந்த பின் தொடர்ச்சியாக விடுப்பு எடுத்துக் கொண்டு, பின்னர் கல்லூரி படிப்பு நிறைவடையாமலேயே விலகிச் சென்றுள்ளார்.அதையடுத்து ஆலப்புழாவில் உள்ள ஒரு மூத்த வக்கீலிடம் தான் ஒரு மாணவி என கூறி இன்டெர்ன்ஷிப் பயின்றுள்ளார். பின் அதே வழக்கறிஞரிடம் தான் பட்டம் வாங்கிவிட்டதாக பொய் கூறி உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். தற்போது காவல்துறை அவரை தேடும் நிலையில் தலைமறைவாகிவிட்டார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!