/* */

மின் கட்டணத்தை குறைப்பதற்கான திட்டம் வெளியீடு: சுமார் 5% வரை குறையலாம்

‘ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு, ஒரே அலைவரிசை, ஒரே விலை’ என்ற திட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

மின் கட்டணத்தை குறைப்பதற்கான திட்டம் வெளியீடு: சுமார் 5%  வரை குறையலாம்
X

நுகர்வோர் மின் கட்டணத்தை குறைக்கும் நோக்கத்துடன், மின்துறையில் போட்டி அதிகரிக்கும் முறை குறித்து மின்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மின் உற்பத்தியிலும், அதை மின் தொகுப்புடன் இணைப்பதிலும் வெற்றி காணப்பட்டது. மின் உற்பத்தி செலவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, 'ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு, ஒரே அலைவரிசை, ஒரே விலை' என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்காக மத்திய மின் ஒழுங்குமுறை ஆணையம், சந்தை அடிப்படையில் சிக்கன விநியோகத்தை (MBED) தொடங்கியுள்ளது. இந்த முறை நாடு முழுவதும் குறைந்த செலவில் மின் உற்பத்தியை உறுதி செய்யும். இதன் மூலம் நுகர்வோருக்கு மின் கட்டண செலவு குறையும்.

இதன் முதல்கட்ட அமலாக்கம் 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் மின் கட்டணம் 5 சதவீதம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விதிமுறைகளை மத்திய மின் ஒழுங்குமுறை ஆணையம் வகுக்கும்.

Updated On: 8 Oct 2021 10:13 AM GMT

Related News