மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

மேலும் ஒரு காலிஸ்தான்   பயங்கரவாதி சுட்டுக்கொலை!
X

பைல் படம்

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில்,இந்தியா- கனடா இடையே உறவில் கடும் விரிசல் விழுந்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் நாட்டில் இருந்து மற்ற நாட்டின் துாதர்களை வெளியேற்றி உள்ளன. இந்த பிரச்னை உலக அளவில் விவாதப்பொருளாக மாறி உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் 2017ல் இந்தியாவில் yஇருந்து தப்பி சென்று கனடாவில் தலைமறை வானவன்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியா - கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இடையில் இன்று மோதல் வெடித்துள்ளது. அப்போது பயங்கரவாதி சுக்தூல் சிங் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2017ல் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்த சுக்தூல் சிங்கை இந்தியாவின் என்.ஐ.ஏ அமைப்பு தேடி வந்தது. இந்த நிலையில் இன்று பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!