கோவையில் தயாராகிறதா எம்.கியூ ரக ட்ரோன்கள்
பைல் படம்
அமெரிக்க எம்.கியூ ரக ட்ரோன்களும், விமான எந்திரங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இது எங்கே இந்தியாவில் தயாரிக்கப்படும் என்பதில் பல கருத்துகள் நிலவுகின்றன. மோடியின் திட்டப்படி அவர் உற்பத்தி பரவலாக்கலை விரும்புகின்றார். அதாவது மோட்டார் என்றால் பஞ்சாப், ஜவுளி என்றால் சூரத், ஐடி தொழில் என்றால் பெங்களூர் போன்றவற்றை மாற்றி இந்தியா எங்கும் தொழில்கள் பரவ வேண்டும் நாடெங்கும் பெரும் தொழில் மையங்கள் உருவாக வேண்டும் என்பது பிரதமரின் கனவு.
அவ்வகையில் விமான தயாரிப்பினை பல இடங்களுக்கு விரிவுபடுத்த விரும்புகின்றார். அவ்வகையில் சரியான இடமாக தமிழகத்தின் கோவை இருக்கலாம் என்கின்றார்கள். விமானம் தயாரிக்குமிடம், அதை சோதிக்க சூலூர் தளம் என அங்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இன்னும் வெளியில் சொல்ல முடியாத சில வசதிகளும் உண்டு.
இதனால் அமெரிக்க இந்திய கூட்டு தயாரிப்பில் உருவாகும் விமானங்களின் பாகம் கோவை பகுதியில் தயாரிக்க அதிக வாய்ப்பு உண்டு என்கின்றது செய்திகள். அது பற்றிய தகவல்கள் பின்னால் வரலாம்.
மோடியின் அமெரிக்க பயணம் தமிழகத்துக்கு மிகப்பெரும் பலனை கொண்டு வரும் அறிகுறிகள் தெரிகின்றன. தேஜஸ் விமானம் முதல் நவீன எம்.கியூ விமானம் வரை அங்கே இனி தயாரிக்கப்படலாம் என்ற தகவல்கள் உலா வருகின்றன.
நம் படைகளுக்கு, 31 ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாங்க, ராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்நிலையில், இந்த ட்ரோன்கள் மிக அதிக விலைக்கு வாங்கப்படுவதாக, காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது.இது குறித்து மத்திய அரசின் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவிடம் இருந்து ட்ரோன்கள் வாங்குவதற்கான விலை இதுவரையிலும் நிர்ணயிக்கப்படவில்லை.தற்போதைய நிலையில், 31 ட்ரோன்களை, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தருவதாக அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது. இதன்படி, ஒரு ட்ரோன் விலை, 812 கோடி ரூபாயாகும்.இது, அமெரிக்காவிடமிருந்து மற்ற நாடுகள் வாங்கியுள்ளதைவிட 27 சதவீதம் குறைவாகும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu