சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து

சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து
X
கொரோனா இரண்டாம் அலை காரணமாக சென்னை-கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவுதல் காரணமாக சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருவருகிறது. இதையடுத்து மேற்குவங்க அரசு, வெளிமாநிலங்களிலிருந்து தங்கள் மாநிலத்திற்கு வரும் விமான பயணிகள் அனைவரும்,கொரோனா வைரஸ் நெகடீவ் மருத்துவ சான்றிதழ்களுடன் தான் வரவேண்டும். நெகடீவ் சான்றிதழ்கள் இல்லாத பயணிகளை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.கொல்கத்தாவிற்கு தினமும் 9 விமானங்கள் சென்னையிலிருந்தும்,அங்கிருந்து தினமும் 9 விமானங்கள் சென்னை வந்து கொண்டிருந்தன. அந்த 18 விமானங்களும் இன்றிலிருந்து மறு அறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.அதைப்போல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரிக்கு செல்லும் 2 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமானநிலையத்தில் கொல்கத்தா விமானங்கள் உட்பட மொத்தம் 96 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் புறப்பாடு விமானங்கள் 48, வருகை விமானங்கள் 48.

இதுதவிர இன்று சென்னையிலிருந்து புறப்பாடு விமானங்கள் 48, வருகை விமானங்கள் 52 மொத்தம் 100 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வருகை விமானத்தில் 2,100 பயணிகளும்,புறப்பாடு விமானத்தில் 2,800 பயணிகளும் மொத்தம் 4,900 பயணிகள் பயணிக்கின்றனா்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil