மீண்டும் மகாராஷ்டிர துணை முதலமைச்சரானார் அஜித் பவார்!
மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட அஜித் பவார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு அஜித்பவார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், பல எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மகாராஷ்டிர துணை முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிர ராஜ்பவனில் நடந்த விழாவில், அஜித் பவாருடன் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உட்பட மொத்தம் 9 என்சிபி தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முன்னதாக மகாராஷ்டிரா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அஜித்பவார்.
ஏற்கெனவே மாநிலத்தில் மொத்தமுள்ள 53 என்சிபி எம்எல்ஏக்களில் 30 பேர் அஜித் பவாருடன் இருப்பதாக செய்திகள் வெளியாகின. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிகளில் இருந்து தப்பிக்க அவருக்கு 36க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இந்த நிலையில் மும்பையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அஜித் பவார் சில கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து என்சிபி தலைவர் சரத் பவாருக்கு தெரியாது.
இதுகுறித்து சரத்பவார் கூறுகையில், “இந்தக் கூட்டம் எதற்காக அழைக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால், அவருக்கு (அஜித் பவாருக்கு) எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அழைக்க உரிமை உள்ளது. அவர் அதைத் தொடர்ந்து செய்கிறார். இதைப் பற்றி என்னிடம் அதிக விவரங்கள் இல்லை. சந்திப்பு" என்று கூறியிருந்தார்.
அஜித் பவாரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘தேவ்கிரி’யில் நடைபெற்ற கூட்டத்தில் என்சிபி மூத்த தலைவர் சகன் புஜ்பால் மற்றும் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கலந்து கொள்ளவில்லை.
மகாராஷ்டிராவில் 40 சேனா எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே வெளிநடப்பு செய்து பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ் மற்றும் சிவசேனாவின் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியை என்சிபியின் நெருக்கடி பலவீனப்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu