மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாராகும் விமான என்ஜின்கள்
இந்திய ராணுவம் பெங்களூரின் எச்.ஏ.எல் நிறுவனத்திடம் இருந்து சுகோய் 30 - MKI விமானங்களுக்கான 240 இஞ்சின்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் மதிப்பு இருபத்தி ஆறாயாயிரம் கோடி ரூபாய்.
ஒரு போர் விமானத்துக்கு இஞ்சின் தான் மகா முக்கியம். அதுதான் சக்தி வழங்கும் அதே நேரம் குறிப்பிட்ட மணிநேரம் பறந்தால் அல்லது சில வருடங்களில் மாற்றீடு செய்ய வேண்டும், அதன் செலவு அப்படி. அதன்படி இந்தியா 2022 ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய சுகோய் - 30 MKI ரக விமானங்களின் இன்ஜினை மாற்றீடு செய்ய வேண்டும்.
இந்த விமானங்கள் இரட்டை இஞ்சின் கொண்டவை. இரு விமானிகள் அமர்ந்து தாக்க கூடியவை. பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான முக்கிய விமானம். ஆனால் 240 எந்திரங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கினால் அதன் விலை லட்சம் கோடி ஏன் அதையும் தாண்டி செல்லும்.
அதுதான் ரஷ்யாவின் வியாபாரம், முன்பு அதுதான் நடந்தது. இல்லை என்றால் முகத்தை திருப்பி விட்டு செல்வார்கள், சீனாவுக்கு கொடுப்பதாக மிரட்டுவார்கள், வேறுவழியின்றி பல லட்சம் கோடியினை ரஷ்யாவுக்கு கொடுத்து விட்டு நாம் வெறும் பையோடு அமர வேண்டும். இதுதான் காங்கிரஸ் ஆட்சியில் நடந்துகொண்டிருந்தது, வரவேண்டிய கமிஷன் வரவேண்டிய வகையில் சிலருக்கு வரும்.
மோடி இதை மாற்றினார், காலம் அவருக்கு ஏற்றபடி கனிந்தது. அதனால் இப்போது இந்திய தயவினை எதிர்நோக்கும் ரஷ்யாவினை வழிக்கு கொண்டு வந்தார். காரணம் ரஷ்ய அனுமதியின்றி இதனை தயாரிக்க முடியாது.
உக்ரைனில் சிக்கி கிடக்கும் ரஷ்யா வேறுவழியின்றி தலையாட்டி விட்டது. மோடியின் அரசு இதைத்தான் எதிர்பார்த்தது. இனி எ.ஏ.எல் நிறுவனம் இந்த விமான இஞ்சின்களை தயாரித்து இந்திய ராணுவத்துக்கு வழங்கும். செலவும் 26 ஆறாயிரம் கோடி கிட்டதட்ட ஐந்தில் ஒரு பங்கு செலவு. இது மாபெரும் சாதனை, இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் மிக பெரிய விஷயம்.
ஏற்கனவே இந்தியாவின் தேஜஸ் விமான இஞ்சின்களில் அமெரிக்க தொழில் நுடப்ம் பயன்படுத்த அந்நாடு இசைந்து அமெரிக்க இஞ்சின் நுட்பம் தேஜஸுக்கு வந்து விட்டது. இப்போது ரஷ்ய இஞ்சின்களை நாமே தயாரிக்கின்றோம்.உலகில் அமெரிக்க மற்றும் ரஷ்ய நுட்பங்கள் இணைந்த நாடு என எதுவுமில்லை காரணம் அது உலக ஆயுத அரசியல். முதல் முறையாக அதை சாதிக்கின்றது இந்தியா.
இந்நிலையில் இந்திய அமெரிக்க கூட்டு ராணுவப்பயிற்சியும் நடந்து வருகிறது, இந்தியா புதிய பாதுகாப்பு யுகத்தில் நுழைகின்றது. இனி பாகிஸ்தான் ஒரு போரை யோசிக்காது. சீனா இனி பலநூறு முறை யோசித்து வழக்கம் போல் பின்வாங்கும். பாரதம் தன்னை தற்காத்து மேலேழுந்து நிற்கும். நம் தேசம் சரித்திரம் படைக்கின்றது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu