தேர்தல் வியூகத்தில் ஏஐ ஆதிக்கம் : தடை விதிக்கப்படுமா..?!
தேர்தலில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு (கோப்பு படம்)
2024-ம் ஆண்டு உலகத் தேர்தல் திருவிழா களமாக மாறியுள்ளது. இந்தியா தொடங்கி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தல் ஜூரம் பற்றிக் கொண்டுள்ளது. இன்றைய தேதியில் மனித குலத்துக்கு சவாலாக உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
உயிருடன் இருப்பவர்கள், உயிருடன் இல்லாதவர்களுடன் நிஜமாகப் பேசுவது போன்ற வீடியோக்களை உருவாக்குவது ஏஐ தொழில்நுட்பத்தில் சாத்தியமாகி உள்ளது. தமிழகத்தில் மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறுஜென்மம் எடுத்து பேசுவது போலவும், கண்முன் உரையாடுவது போன்ற காட்சிகளும், குரல் பதிவுகளும் ஏஐ தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெகுஜன மக்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களவைத் தேர்தலிலும், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி பல டீப்பேக் வீடியோக்கள் விரைவில் இந்திய தேர்தல் களத்தில் உலா வர உள்ளது. இதனால் தேவையற்ற பல குழப்பங்கள் ஏற்படும் என்ற ஒரு வித அச்சம் நிலவி வருகிறது. எனவே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப்பேக் வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu