இந்தியா வைத்த செக் : இருண்டு கிடக்கும் வங்கதேசம்..!

இந்தியா வைத்த செக் :  இருண்டு கிடக்கும் வங்கதேசம்..!
X

அதானி மின்னுற்பத்தி நிலையம் ஜார்கண்ட் 

இந்தியா வைத்த செக்கில் வங்கதேசத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.

அதானி பவர் லிமிடெட்டுக்கு (ஏபிஎல்) ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடாவில் 1500 மெகாவாட் உற்பத்தி திறன் உடைய அல்ட்ரா சூப்பர்-கிரிட்டிகல் அனல் மின் உற்பத்தி நிலையம் இருக்கிறது.

இந்த நிலையத்தில் இருந்து தான் வங்காளதேசத்திற்கு சுமார் தினமும் சுமார் 1500 மெகாவாட் மின்சாரம் போய்க்கொண்டு இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு ஷேக் ஹசீனா அதானியை டாக்காவிற்கு அழைத்து நீங்கள் தான் எங்கள் நாட்டை ஒளிர வைக்க வேண்டும் என்று கூறி அதானி நிறுவனத்தின் ஜார்கண்ட் பிரிவான ஏபிஜேஎல் உடன் கையெழுத்து போட்டார்.

வங்காள தேசத்தின் மின் பகிர்வு நிறுவனமான பங்களாதேஷ் பவர் டெவலப்மென்ட் போர்டு (BPDB) அதானி உடன் ஏகப்பட்ட மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை போட்டு இருக்கிறது. இதன்படி இப்பொழுது வங்காள தேசம் ஒளிர்கிறது என்றால் அதற்கு காரணம் அதானி தான்.

இப்பொழுது அதானி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? வங்காள தேசத்திற்கு கரண்ட் இனி கிடையாது என்று கூறி விட்டார். அதானி மின் நிலையங்களில் இருந்து வங்காள தேசத்திற்கு செல்லும் மின்சாரம் தனி பவர் கிரிட் வழியாக செல்கிறது.

அந்த பவர் கிரிட் வழியாக செல்லும் மின்சாரத்தை இந்தியாவில் உள்ள 5 பவர் கிரிட்களில் வடகிழக்கு மாநிலங்களில் மின் பகிர்வை கொண்டு செல்லும் நார்த் ஈஸ்டர்ன் பவர் கிரிட் உடன் இணைக்க அதானி இந்திய அரசிடம் அனுமதி பெற்று விட்டார். இதனால் என்ன ஆகும் தெரியுமா? ஜார்கண்டில் கோடாவில் உருவாகும் அதானியின் மின்சாரம் வங்காள தேசத்திற்கு செல்லாமல் இந்தியாவின் 5 தேசிய பவர் கிரிட்களின் வழியாக இந்தியாவில் எங்கு மின்சார தட்டுப்பாடு உருவாகிறதோ அங்கு சென்று விட்டது.

வங்காள தேசத்தில் உள்ள சில பகுதிகளில் வாழும் மக்கள் வானத்தை பார்த்து நிலா நட்சத்திரம் இருந்தால் அதன் வெளிச்சத்தில் இரவில் வாழ்ந்து கொள்ள வேண்டியது தான்.

மோடி அதானி மாதிரி ஒரு பவர்புல் தொழில் அதிபரை வளர்த்து விடுகிறார் என்றால் அவரை வைத்து பல நாடுகளில் தொழில் தொடங்க வைத்தும், அவரின் தொழிலை பயன்படுத்தியும் அந்த நாடுகளை இந்தியாவின் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஒரே எண்ணம் தானே தவிர வேறு எதுவும் கிடையாது.

அதானி வங்காள தேசத்திற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தினால் அது தனியார் நிறுவனத்தின் பிரச்சனையாக முடிந்து விடும். இதை இந்திய அரசினால் செய்ய முடியுமா?முடியாது அல்லவா. இதற்கு தான் அதானி மாதிரி தொழில் அதிபர்கள் தேவைப்படுகின்றனர்.

இதை தெரிந்த சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் அதானியை வீழ்த்தி இந்தியாவை முடக்க இங்குள்ள ஒரு கூட்டத்தினை பயன்படுத்தி வருகின்றன. இவர்களும் எதிர்ப்பு என்கிற ஒரே காரணத்தை முன் வைத்து இந்தியாவை வீழ்த்த நினைக்கும் வெளிநாடுகளின் சதிகளுக்கு பலியாகி வருகிறார்கள். ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் எப்பொழுதும் மோடியை பலப்படுத்திக்கொண்டே இருப்பார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!