மாநிலஅரசே மருந்து வாங்குவதால் பிரதமர் படத்தை நீக்கிவிட்டு முதல்வர் படம்
மாநில அரசே பணம் கொடுத்து வாங்குவதால் பிரதமர் படத்தை அகற்றிவிட்டு முதலவர் படம்
சத்தீஸ்கர் அரசு தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை அகற்றி சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹல்
செலவு செய்வது நாங்க சர்டிபிக்கட்டுல உங்க படமா? மாற்றத்துக்கு தயாரான சட்டீஸ்கர் மாநிலம்
சட்டீஸ்கரில் மாநில அரசே பணம் கொடுத்து கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்குவதால் வழங்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படத்தை அகற்றிவிட்டு, தங்கள் மாநில முதல்வர் படத்தை அச்சிட போறாங்காளம்.
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படுவோருக்கு கொடுக்கக்கூடிய சான்றிதழ்களில் மோடியின் படம் இடம் பெறுவது பல்வேறு தரப்பிலும் ஏற்கனவே சர்ச்சைகளை கிளப்பி இருந்த நிலையில், மத்திய அரசு அது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தது.
மத்திய அரசால் போதுமான தடுப்பூசி சப்ளையை மாநில அரசுகளுக்கு வழங்க முடியாததன் காரணமாக தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் மூலமாக தாங்களாகவே தடுப்பூசிகளை வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவினை மேற்கொள்ள கோவின் இணையதளத்தை மத்திய அரசு ஆரம்பித்தது போல 'சி ஜி டீக்கா' என்ற பெயரில் சத்தீஸ்கர் அரசு தனியாக இணையதளத்தை உருவாக்கி 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவை மேற்கொண்டு வருகிறது. இதில் பதிவு செய்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு சத்தீஸ்கர் அரசு சார்பில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதனால இனிமேல் சர்டிபிக்கட்டுல சட்டீஸ்கர் முதலமைச்சர் படம் தான் இருக்கோணுமாம்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu