உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதிரடி
உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகிஆதித்யநாத்.
உ.பி வாரணாசியில், தமிழக சிவகங்கை மாவட்டம் நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு சொந்தமான 63 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலம் காசி விஸ்வநாதர் ஆலய தினசரி புஷ்ப கைங்கர்யம் பணிக்காக நந்தவனம் அமைக்க கங்கைக் கரையில் 1813 -ல் வாங்கப்பட்டது.
அது காலப் போக்கில் சமாஜ்வாதி ஆட்சியில் அந்த கட்சியின் செல்வாக்கான அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. இங்கு திருமணங்கள் நடத்தப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு அவர்களால் அனுபவிக் கப்பட்டு வந்தது. இதனை மீட்க எவ்வளவோ முயன்றும் நகரத்தாரால் திரும்பப் பெற முடியாத நிலையில், ஆண்டுக்கு ₹ 20 லட்சம் செலவில் வெளியில் இருந்து புஷ்பங்கள் விலை கொடுத்து வாங்கி காசி விஸ்வநாதருக்கு தேவையான கைங்கர்யம் நிறைவேற்றப்பட்டு வந்தது.
கடந்த மாதம் நகரத்தார் சமூகம் இந்த ஆக்ரமிப்பு தொடர்பாக யோகி அரசின் வாரணாசி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்குள் மொத்த இடமும் ஒரு அங்குலம் கூட குறையாமல் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது… ஆச்சர்யம்… வெறும் 24 மணி நேரத்தில். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த நடவடிக்கையால் சிவகங்கை நகரத்தார் சமூகம் மனம் குளிர்ந்து போய் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu